மேலும் அறிய
Advertisement
Crime: மயிரிழையில் உயிர் தப்பிய திமுக எம்எல்ஏ - கடலூர் அருகே திருமண மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனை கொல்ல முயற்சியா?. பெட்ரோல் குண்டு வீசிய சம்பவ எதிரொலியால் எம்எல்ஏ வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீசார்.
கடலூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினராக இருப்பவர் கோ ஐயப்பன். இவர் நேற்று தனது தொகுதிக்குட்பட்ட கடலூர் - புதுச்சேரி எல்லையில் தமிழக பகுதியான நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகியான மணிவண்ணனின் மகள் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நல்லாத்தூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு இரவு காரில் வந்துள்ளார்.
அவர் காரில் இருந்து இறங்கி மண்டபத்திற்குள் சென்ற சில நிமிடங்களில் நுழைவு வாயில் அருகே ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக மேசை அமைக்கப்பட்டு, அதில் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டு வந்தது. அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சாலையில் இருந்து பெட்ரோல் குண்டு வீசினார்கள்.
இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். உடனடியாக வெளியே வந்த எம்.எல்.ஏ.ஐயப்பனை உடனடியாக அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியில் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பீர் பாட்டிலில் மண்ணெண்ணையுடன் பெட்ரோல் கலந்து வீசி இருப்பது தெரிந்தது. தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி காரணமாக கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் வீட்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
மேலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான காரணம் என்ன? பெட்ரோல் குண்டு வீசியது யார்?, எம்.எல்.ஏ.வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடலூர் புதுவை மாநில எல்லையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion