மேலும் அறிய

Crime: துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்! சாக்கு மூட்டையில் சடலம் - உத்தர பிரதேசத்தில் ஷாக்!

உத்தர பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட  நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே வட மாநிலங்களில் அதேபோன்று பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. 

துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்:

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது, உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹோ மாவட்டத்தில சதாத் நகரில் சாலையோரத்தில் இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட  நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

சதாத் நகரில் சாலையோரத்தில் சந்தேகத்திற்குரிய சாக்கு மூட்டைகள் கிடப்பதாக உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு சாக்கு மூட்டைகளையும் பிரித்து பார்த்தனர். அதில், இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்தரங்க உறுப்புகள், கால்கள், கைகள் என வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவித்தனர். 

உத்தர பிரதேசத்தில் கொடூரம்:

இதனை அடுத்து, தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, தடயங்களை சேகரித்தன. பின்னர், உடல் உறுப்புகளை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சதாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து  போலீசார் கூறுகையில், ”கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் தெரியாத அளவுக்கு  மர்ம நபர்கள் துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். உயிரிழந்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். 

இறந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக பிரேத பரிசோதனையில் கூறப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 20 முதல் 23 வயது இருக்கும். இதுகுறித்து விசாரித்து வருகிறோம். யாரும் கைது செய்யப்படவில்லை" என்றனர். 

முன்னதாக, மற்றொரு சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. அதாவது, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரை நாலாசோபாரா பகுதியைச் சேர்ந்த சீதல் சாவந்த் (29)  என்பவர் கொலை செய்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால், ஆத்திரத்தில் தனது காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்து கால்வாயில் தூக்கி வீசிவிட்டு தலைமறைவாகி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget