திண்டுக்கல் : தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்தவர்களை ஆபாசமாக பேசிய வங்கி ஊழியர்கள் போலீசாரிடம் ஒப்படைப்பு
மைக்ரோ பைனான்ஸ் மூலமாக கடன் பெற்றிருந்தவர்களிடம் இரவு நேரத்தில் குடி போதையில் வந்து பெண்களிடம் ஆபாச வார்த்தைகள் பேசிய ஊழியர்களை பொதுமக்கள் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மைக்ரோ பைனான்ஸ் மூலமாக கடன் பெற்றிருந்தவர்களிடம் இரவு நேரத்தில் குடி போதையில் வந்து பெண்களிடம் ஆபாச வார்த்தைகள் பேசி வசூலில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் 4 பேரை ஊர் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து வேடசந்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Annamalai: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - காரணம் என்ன?
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக வேடசந்தூர் தாலுகா நாகம்பட்டி ஊராட்சி ஒட்டநாகம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கடனுதவி பெற்றுள்ளனர்கள். கடன் தொகையை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக கடன் பெற்ற பெண்களிடம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த கருத்தபாண்டி என்ற ஊழியர் நேற்று மாலை சுமார் 7.30 மணி அளவில் அக்கிராமத்திற்கு சென்று பெண்களிடம் கடன் தொகையை கேட்டுள்ளார். கடன் தொகை செலுத்துவதற்கு தங்களால் முடியவில்லை சிறிது நாள் கால அவகாசம் கொடுங்கள் என்று பெண்கள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களிடமிருந்து வசூலிக்காமல் செல்ல முடியாது என்று பிடிவாதமாக நின்ற கருத்தபாண்டி வசூல் மேலாளரான முத்துச்சாமியை அழைத்துள்ளார். முத்துச்சாமி அவருடன் மூன்று ஊழியர்களை அழைத்து அந்த கிராமத்தில் வந்து ஆபாச வார்த்தையில் பேசியுள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் கழுத்தை அறுத்து விடுவேன் என்று பெண்களை மிரட்டியதாகவும் இதை அறிந்த ஊர் பொதுமக்கள் சுற்றி வளைத்ததில் வசூல் மேலாளர் முத்துசாமி குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.
அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வேடசந்தூர் போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் இரவு நேரத்தில் கிராமத்திற்குள் சென்று அத்துமீறலாக ஆபாச வார்த்தையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்