மேலும் அறிய

"தங்கையை கொடுமைப்படுத்தியதால் கொன்றேன்" - திருநங்கையின் அதிர்ச்சி வாக்குமூலம்

வீட்டின் அருகே குழி தோண்டி உடல்  புதைப்பு. தங்கையை கொடுமைப்படுத்தியதால் திருநங்கையான சகோதரன் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம்.

பழனி அருகே கூலித் தொழிலாளி அடித்து கொலை . வீட்டின் அருகே குழி தோண்டி உடல்  புதைப்பு. தங்கையை கொடுமைப்படுத்தியதால் திருநங்கையான சகோதரன் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் -  கொலையாளியை கைது செய்து போலீஸார் வீசாரணை.


திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து. முத்துவிற்கு மாரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முத்து வீட்டிற்கு வராததால் மனைவி மாரியம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் முத்துவை காணவில்லை என புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் போலீசார் முத்துவை பல இடங்களில் தேடி வந்தனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக முத்துவின் வீட்டிற்கு அருகில் குழி தோண்டப்பட்டது போல தடயம் இருப்பதாக போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து முத்துவின் வீட்டின் அருகில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த இடத்தை தோண்டினர். அங்கு முத்துவின் உடல் புதைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. காணாமல் போனதாக கூறிய முத்து, வீட்டின் அருகே கொலை செய்து புதைக்கப்பட்டிருந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முத்துவை கொலை செய்தது யார்? குழி தோண்டி புதைத்தது யார் ? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொலையான முத்துவின் மனைவி மாரியம்மாளின் சகோதரர் மூன்றாம் பாலினத்தவரான வைஷ்ணவி இருதினங்களாக வீட்டிற்கு வராமல் தலைமுறைவாகியுள்ளார்.


இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வைஷ்ணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் திருநங்கை வைஷ்ணவி பெங்களூரில் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் வைஷ்ணவியின் செல்போன் சிக்னலை வைத்து வைஷ்ணவி இருக்கும் இடத்தை தெரிந்து மடக்கி பிடித்தனர். வைஷ்ணவி பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்த போது கொலைக்கான காரணம் தெரியவந்தது. தனது சகோதரி மாரியம்மாளை திருமணம் செய்ததில் இருந்து முத்து மது போதையில் வந்து அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் அடிக்கடி முத்துவிற்கு மாரியம்மாவிற்கும் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனைப் பார்த்து மன உளைச்சலில் இருந்த வைஷ்ணவி  மாரியம்மாள் இரவில் மில்லுக்கு வேலைக்குச் சென்ற நேரத்தில் போதையில் இருந்த முத்துவை கம்பியால் அடித்து கொலை செய்ததாகவும், பின்னர் உடலை வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கொலையாளி வைஷ்ணவி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget