மேலும் அறிய

சொத்துக்காக சகோதரனையே...கிணற்றுக்குள் மிதந்த தொழிலாளியின் சடலம் - கொலை வழக்காக மாறியது எப்படி?

நத்தம் அருகே சொத்துக்காக சொந்த சகோதரனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்டமலைபட்டியைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு வெள்ளையம்மாள், அடைக்கம்மாள் ஆகிய இரண்டு மனைவிகள். முதல் மனைவி வெள்ளையம்மாளுக்கு சின்னக்கரந்தி, முத்தம்மாள் ஆகிய இரண்டு மகள்களும், 2- வது மனைவிக்கு  அம்மணி என்ற தங்கமணி, ராமன் ஆகிய இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். பழனி மற்றும் அவரது இரண்டு மனைவிகளும் இறந்து விட்டனர். மூத்த மகளான சின்னக்கரந்தி (வயது 28) என்பவர் நத்தம் ஆவிச்சிபட்டியை  சேர்ந்த ஜெயராஜ் மகன் குணசேகரன் (வயது 37) என்பவரை காதல் கலப்பு திருமணம் செய்துள்ளார். இவர் சென்ட்ரிங் வேலை மற்றும் டெக்கரேஷன் வேலைகள் செய்து வந்தார்.

சொத்துக்காக சகோதரனையே...கிணற்றுக்குள் மிதந்த தொழிலாளியின் சடலம் - கொலை வழக்காக மாறியது எப்படி?

திருமணத்திற்கு பிறகு சின்னக்கரந்தி  என்பவரின் தோட்டத்து வீட்டிலேயே குணசேகரன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இளைய மகள் முத்தம்மாள் சின்னையம்பட்டியில் திருமணமாகி உள்ளார். இரண்டாவது மனைவியின் மகள் அம்மணி என்ற தங்கமணி (வயது 26) என்பவரை திண்டுக்கல் அருகே சிறுமலையில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணம் செய்த சில  ஆண்டுகளில்  அங்குள்ள வேறொரு நபருடன் அம்மனி கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதன் காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். கணவரை விட்டுப் பிரிந்தவர் மொட்டமலைபட்டியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்து தம்பி ராமன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். ராமன் திருமண மற்றும் விசேஷங்களுக்கு டெக்கரேஷன் மற்றும் மைக் செட் போடும் வேலை செய்து வந்தான். இவருடைய நண்பன் எர்ரம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் (வயது 23) என்பவரும் இதே வேலையை செய்து வந்தான். இதனால் ராமன் வீட்டிற்கு அடிக்கடி கார்த்திக் வந்து சென்றுள்ளார். அவ்வாறு வந்து சென்றபோது ராமனின் சகோதரி அம்மணி என்ற தங்கமணியுடன் கார்த்திக்கு நெருக்கம் ஏற்பட்டது இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் சில மாதங்களாக அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

சொத்துக்காக சகோதரனையே...கிணற்றுக்குள் மிதந்த தொழிலாளியின் சடலம் - கொலை வழக்காக மாறியது எப்படி?

இருவரும் கள்ளத்தொடரில் இருப்பதை அறிந்த ராமன் அவரது சகோதரியையும் நண்பனையும் கண்டித்து சகோதரிடமிருந்த செல்போனை பிடுங்கி இவர்களது பெரியப்பாவான பழனிச்சாமி என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனால் அம்மணி-கார்த்தி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்க முடியாத சூழல் உருவானது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த உறவை அறிந்த சின்னகரந்தி கணவர் குணசேகரன் அம்மணியை அடைவதற்கு பல முறை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதை அம்மணி அவரது சகோதரியும் குணசேகரன் மனைவியுமான சின்னகரந்தியிடமும் தம்பி ராமனிடமும் சொல்லியுள்ளார். இதனால் ராமனுக்கும் குணசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே சொத்து பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. சொத்து முழுவதும் ராமனின் பாட்டி பெயரில் இருந்ததால் பாகப்பிரிவினை செய்வதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் சொத்து பிரிப்பதில் சிக்கல் நீடித்து வந்துள்ளது. இதனால் ராமனுக்கும் குணசேகரனுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. கள்ளக்காதலை கண்டித்ததால் ராமனுக்கும் கார்த்திக்கும், சொத்து பிரச்சனையால் குணசேகரனுக்கு ராமனுக்கும் பகை நீடித்து வந்துள்ளது. இதனால் குணசேகரனும் கார்த்திக்கும் சேர்ந்து கடந்த 8- ஆம் தேதி காலை இருவரும் மது குடித்துக் கொண்டே ராமனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அதை தனது மனைவி சின்னகரந்தி, கார்த்திக்கின் காதலி அம்மணி ஆகியோரிடம் இருவரும் கூறியுள்ளனர். இதை அன்று இரவே செயல்படுத்த முடிவு செய்த நான்கு பேரும்  ராமன் அயர்ந்து தூங்கும் நேரம் பார்த்து குணசேகரன் வீட்டில் நால்வரும் காத்திருந்தனர்.

சொத்துக்காக சகோதரனையே...கிணற்றுக்குள் மிதந்த தொழிலாளியின் சடலம் - கொலை வழக்காக மாறியது எப்படி?

ராமன் தூங்கியவுடன் அவர்கள் எதிர்பார்த்தபடி திட்டத்தை நிறைவேற்ற நேரம் வந்தது. அன்று நள்ளிரவு குணசேகரன் உள்ளிட்ட நான்கு பேரும் ராமன் தூங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர். அங்கு தென்னை ஓலையால் நெய்யப்பட்ட தட்டியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமனை குணசேகரன் மண்வெட்டி கைப்பிடியால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த ராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க இறந்துள்ளார். இறந்தவரின் ரத்தம் தட்டி ஆஸ்பெட்டாஸ் உள்ளிட்ட பகுதிகளில் சிதறி இருந்தது. உடலை அப்புறப்படுத்த அருகில் இருந்த கிணற்று மேட்டுக்கு நான்கு பேரும் தூக்கிச்சென்றுள்ளனர். அங்கு ராமனின் இடுப்பில் துண்டு மற்றும் வேஷ்டியை கொண்டு பெரிய கருங்கல்லை கட்டி கிணற்றுக்குள் தூக்கி வீசினர்.

பின்னர் கொலையாளிகள் அணிந்திருந்த ரத்த கரை படிந்த உடைகளை கழற்றி அவற்றை தீ வைத்து எரித்தனர். மறுநாள் சனிக்கிழமை அதிகாலையில் இறந்த ராமனின் ரத்தம் படிந்த இடத்தை சின்னகரந்தி,  அம்மணி ஆகிய இருவரும் சேர்ந்து ரத்தக்கரையை மறைக்க மாட்டு சானத்தால் பூசியும், மெழுகியும் மறைத்தனர். பின்னர் வழக்கம் போல் நடந்தது எதுவும் தெரியாதது போல் இராமன் என்பவரை காணவில்லை என ஊர் முழுவதும் சொல்லியுள்ளனர். சம்பவம் குறித்து உண்மை அறியாத  ராமனின் நண்பர்கள் நண்பனை காணவில்லை என சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்தை ஏற்றி பதிவிட்டு வந்தனர். பின்னர் மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் அவரைத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலையில் கிணற்றில் வீசிய ராமனின் உடல் மிதக்க ஆரம்பித்து துர்நாற்றம் வீசியது.

சொத்துக்காக சகோதரனையே...கிணற்றுக்குள் மிதந்த தொழிலாளியின் சடலம் - கொலை வழக்காக மாறியது எப்படி?

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினரும் கொலையாளிகளும் கிணற்றில் ராமனின் உடல் மிதப்பதாக நத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நத்தம் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இறந்தவரின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர் உடலில் காயங்களும் அவரது இடுப்பில் கருங்கல்லும் கட்டி இருந்ததை அறிந்து இறப்பில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் அவரது குடும்ப உறுப்பினர்களை விசாரணை செய்தனர்.

ராமன் இறப்பதற்கு முன் அவரது அலைபேசியில் வந்த அழைப்புகளை பரிசோதனை செய்ய தொடங்கினர் அப்போது எர்ரம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 10 முறைக்கு மேல் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் கார்த்திக்கை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் பல உண்மைகள் வெளியே வந்தது. சொத்துக்காகவும் கள்ளக்காதலுக்காகவும் நால்வரும் கூட்டுச் சேர்ந்து சொந்த சகோதரனையே மேலே சொன்ன திட்டப்படி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.   கொலையாளிகள் நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சொந்த சகோதரனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
Embed widget