முதல் மனைவியின் வீட்டில் இருக்கும் கணவனை மீட்டுத்தரக்கோரி இரண்டாவது மனைவி தர்ணா
கணவர் முதல் மனைவி வீட்டிலேயே தங்கி விடுவதால் இதனால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி கவுசல்யா தனது பச்சிளம் குழந்தையுடன் தர்ணா
கரூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு லீலாவதி என்ற பெண்ணுடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கௌசல்யா என்பவரை இரண்டாவதாக இளங்கோ திருமணம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கடந்த 10 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இளங்கோவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கவுசல்யாவுக்கு கடந்த ஓராண்டுக்கு முன் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கௌசல்யா கரூர் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இளங்கோவை இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து வாழ அப்பொழுது முடிவு செய்து மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். புகார் அளிக்கப்பட்ட தருணத்தில் இரண்டாவது மனைவி கவுசல்யா 8 மாத ஆண் குழந்தை பிறந்திருந்தது.
தற்போது கடந்த இரண்டு மாதங்களாக இளங்கோ என்பவர் கௌசல்யா இரண்டாவது மனைவி என்பவர் வீட்டுக்கு செல்லாமல் முதல் மனைவி வீட்டிலேயே தங்கி விடுவதால் இதனால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி கவுசல்யா தனது பச்சிளம் குழந்தையுடன் இன்று முதல் மனைவி வசிக்கும் காமராஜபுரம் மூன்றாவது தெருவில் திடீர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் பேசுகையில் எனக்கும் இளங்கோ என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளோம். இந்நிலையில் எனக்கு தெரியாமல் என்னை ஏமாற்றி எனக்கு முன்பாகவே திருமணம் ஒன்றை செய்து என்னை ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து கடந்த ஓராண்டுகளுக்கு முன் கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்கள் என்னுடன் எனது கணவரை அனுப்பிவைத்தனர். நிலையில் கடந்த 2 மாதங்களாக எனது கணவர் என் வீட்டிற்கு வருவது இல்லை, எனது பொருளாதார ரீதியாக எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை எனவும் கூறினார்.
இதனால் எனது கணவரை மீட்டுத் தரக்கோரி தற்போது நான் எனது கணவர் முதல் மனைவி வசிக்கும் இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளேன் என தெரிவித்தார். இந்த தகவலை தரும் நகர போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தவுடன் கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தார். அதன்பிறகு பச்சிளம் குழந்தையுடன் கௌசல்யா தர்ணாவில் ஈடுபட்டு இருந்த நிலையில் அவரை கரூர் நகர போலீசார் சமாதானப்படுத்தி உனது கணவரை உன்னுடன் சேர்த்து வைக்க உறுதி அளிக்கிறோம் என கூறிய பிறகு கரூர் நகர காவல் ஆய்வாளர் காலில் விழுந்து இளம்பெண் நன்றி தெரிவித்தார். சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நீடித்த கணவர் மீட்பு போராட்டம் போலீசார் கேட்டுக்கொண்டதற்கிணங்க முடிவுக்கு வந்தது.