ரெடிமேட் கடையில் நூதன முறையில் துணிகள் திருட்டு; சிசிடிவியால் சிக்கிய 2 பெண்கள்
தருமபுரியில் ரெடிமேட் கடையில் ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள துணி வகைகளை திருடிய பெங்களூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சிசிடிவி கேமரா உதவியின் மூலம் சிக்கினர்.
தருமபுரி பேருந்து நிலையம் அதைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி ரெடிமேட் கடைகளில் தொடர்ந்து செல்போன்கள் மற்றும் பொருட்கள் களவு போவதாக தருமபுரி மாவட்ட காவல் துறையினருக்கு தொடர்ந்து வந்த பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், உத்தரவின் பேரில் தருமபுரி நகர காவல் துறையினர் வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்களில் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தருமபுரியில் உள்ள ஆண்கள் ரெடிமேட் கடையில், கடந்த 16ம் தேதி கடைக்கு வந்த இரண்டு பெண்கள் ரூ.23,000 மதிப்புள்ள ரெடிமேட் துணி வகைகளை நூதமான முறையில் திருடி சென்று தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தொடர்ந்து தருமபுரி நகர காவல் துறையினர் அந்தக் கடையிலும், அந்த பகுதியிலும் உள்ள கடைகளில் இருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த கேமராவில் பதிவாகியிருந்த பல்வேறு காட்சிகளை வைத்து, திருடி சென்ற பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று தருமபுரி நகரில் சுற்றித் திரிந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் சுமதி, சுஜாதா, என்பதும் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், ரெடிமேட் கடையில் நூதனமான முறையில் திருடியவர்கள் என்பது, கண்காணிப்பு காட்சிகளில் இருந்தது தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா காலங்களில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறைந்துள்ள வணிக நிறுவனங்களில் இது போன்ற நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என தெரியவந்தது. தற்போது சாதாரண நாட்களிலும் தருமபுரி நகரில் நூதன வகையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த இரண்டு பெண்களையும் கண்காணிப்பு கேமரா உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் இந்த பெண்கள் இருவரும் வேறு எங்கு இதுபோன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? எந்த கோணத்தில் அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தருமபுரி நகரில் நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு பெங்களூர் பெண்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் காவல் துறையினர் கைது செய்துது குறிப்பிடத்தக்கது.