மேலும் அறிய

Cyber Crime: காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பயன்படுத்தி சைபர் க்ரைமில் ஈடுபடும் கும்பல்.. எப்படி தெரியுமா?

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட லிங்கை பயன்படுத்தி சிலர் சைபர் க்ரைமில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

பொதுவாக புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் சில வேகமாக பலரின் கவனத்தை ஈர்க்கும். அப்படி சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தப் படத்தை பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் முதல் பல பிரபலங்கள் வரை இந்தப் படம் தொடர்பாக பேசி வருகின்றனர். 

இந்நிலையில் இந்தப் படத்தை வைத்து சிலர் சைபர் க்ரைமில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அதாவது இந்தப் படத்தை இலவசமாக ஆன்லைனில் பார்க்க துண்டி சைபர் க்ரைமில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நொய்டாவில் சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. 

Cyber Crime: காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பயன்படுத்தி சைபர் க்ரைமில் ஈடுபடும் கும்பல்.. எப்படி தெரியுமா?

இதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் லிங்க் வைத்து இந்தப் படத்தை இலவசமாக பார்க்க துண்டுகின்றனர். அவ்வாறு இந்த லிங்கை வாடிக்கையாளர்கள் க்ளிக் செய்யும் போது அவர்களுடைய மொபைல் போனை ஹேக் செய்து வங்கி தகவல்கள் உள்ளிட்டவற்றை திருடி வங்கி கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்துவிடுகின்றனர். அத்துடன் பலரின் தகவல்களையும் இவர்கள் திருடி வருவதும் தெரியவந்துள்ளது.  இந்த போலி லிங்க் மூலம் பலர் தங்களுடைய வங்கி கணக்குகளிலிருந்து பணத்தை இழந்துள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 

ஆகவே இது போன்று படத்தை பார்க்கவோ அல்லது இலவசமாக பதவிறக்கம் செய்ய வரும் லிங்க் உள்ளிட்டவற்றை யாரும் க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சைபர் விஷயங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த விவகாரத்தில் ஈடுபட்டு வரும் கும்பலை பிடிக்க சைபர் க்ரைம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே மக்கள் இதுபோன்று வரும் லிங்க்களை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும் என்று மக்களை எச்சரித்துள்ளனர். திரையரங்குகளில் மிகவும் பிரபலமாக ஓடி வரும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் முதல் வாரத்தில் சுமார் 60 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:பியூட்டி பார்லரில் பணிபுரியும் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொல்லமுயன்ற நபர் கைது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Breaking News LIVE: நரிக்குறவர் சமுதாய மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்
Breaking News LIVE: நரிக்குறவர் சமுதாய மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Senji Masthan : மஸ்தானுக்கு டம்மி பதவி? ஓரங்கட்டுகிறதா திமுக?Kanimozhi : குவைத் விபத்தில் இளைஞர் மரணம்!கனிமொழி நேரில் நிவாரணம்’’அழாதீங்க மா’Jagan Mohan Reddy Plan : சந்திரபாபு நாயுடுவுக்கு செக்..மோடியிடம் SURRENDER-ஆன ஜெகன்?Thiruvarur | தந்தை துப்புரவு பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்! திருவாரூரில் அசத்தல்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Breaking News LIVE: நரிக்குறவர் சமுதாய மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்
Breaking News LIVE: நரிக்குறவர் சமுதாய மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
T20 World Cup 2026: இந்தியா, அமெரிக்கா உட்பட இந்த 12 அணிகள்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி..!
இந்தியா, அமெரிக்கா உட்பட இந்த 12 அணிகள்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி..!
Caste Violence: இனி பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை இருக்காது: அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
Caste Violence: இனி பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை இருக்காது: அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
Thankar Bachan: உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு..நன்றி தெரிவிக்க வந்த இடத்தில் கடுப்பான தங்கர்பச்சான்!
உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு..நன்றி தெரிவிக்க வந்த இடத்தில் கடுப்பான தங்கர்பச்சான்!
Embed widget