மேலும் அறிய
Advertisement
திருமணமான 22வது நாளில் கணவனை கொல்ல மாஸ்டர் பிளான்: லீக் ஆகிவிடுமோ என்கிற பயத்தில் மனைவி தற்கொலை!
புவனேஸ்வரி, நிரஞ்சனிடம் கூறியதன் பேரில் கடந்த 2-ந் தேதி தொட்டி பாலத்திற்கு வந்து கவுதமை கார் ஏற்றி கொல்ல முயன்றதாகவும், இதற்காக ரூ.75 ஆயிரம் வாங்கியதாகவும் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் வடக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் கவுதம் (24) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் (21) கடந்த மாதம் 10-ந்தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி புவனேஸ்வரி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் திருமணமான ஒரு மாதத்துக்குள் புதுப்பெண் தற்கொலை செய்ததால், அவரது இறப்பு குறித்து உத்தமபளையம் RTO சாந்தி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தற்கொலை செய்து கொண்ட புவனேஸ்வரிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது தெரியவந்தது. அவர் திருமணத்துக்கு முன்பு காவலர் தேர்வுக்கு தயாராகி வந்ததாகவும், பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக அவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் புவனேஸ்வரிக்கும் கம்பம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்த நிரஞ்சன் (22) என்பவருக்கும் நெருங்கிய நட்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் புவனேஸ்வரி தனது நகையை வங்கியில் அடகு வைத்து ரூ.75 ஆயிரம் பணத்தை நிரஞ்சனிடம் கொடுத்து, தான் கணவரை வெளியில் அழைத்து வருவதாகவும், அங்கு அவரை காரை ஏற்றி கொன்று விடுமாறும் கூறியுள்ளார். இந்த திட்டத்தின்படி திருமணமான 22-வது நாளில், அதாவது கடந்த 2-ந்தேதி புவனேஸ்வரி கணவரிடம் ஆசைவார்த்தை கூறி அவரை மோட்டார் சைக்கிளில் வெளியில் அழைத்து வந்துள்ளார். கூடலூர் அருகே தம்மணம்பட்டி பகுதியில் உள்ள தொட்டிபாலத்தை அவர்கள் பார்த்துவிட்டு திரும்ப வந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் சென்ற இரண்டு சக்கர வாகனம் பழுதாகிவிட்ட நிலையில். வாகனத்தை தள்ளிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்த போது . பின்னால் ஒரு கார் வேகமாக வந்து கவுதமின் வாகனத்தின் மீது மோதியது.
இந்த சமயத்தில் காரில் இருந்து இறங்கிய 5 பேர் கவுதமை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதையடுத்து காரின் கேரள பதிவெண்ணை அடிப்படையாக வைத்து, கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் கவுதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிய கார் மற்றும் 5 பேர் கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
இது, புவனேஸ்வரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கணவரை கொலை செய்ய தான் திட்டம் போட்டது வெளியில் தெரிந்து விடுமோ என்று பயந்து புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கவுதம் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றவர்கள் குறித்து போலிசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் இதில் புவனேஸ்வரிக்கு ஏற்கனவே பழக்கமான நிரஞ்சன், அவரது நண்பர்களான கோவிந்தன்பட்டியை சேர்ந்த மனோஜ் (20), சத்யா (21), பிரதீப் (37) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கூலிப்படை போல செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், புவனேஸ்வரி நிரஞ்சனிடம் கூறியதன் பேரில் கடந்த 2-ந் தேதி தொட்டி பாலத்திற்கு வந்து கவுதமை கார் ஏற்றி கொல்ல முயன்றதாகவும், இதற்காக ரூ.75 ஆயிரம் வாங்கியதாகவும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். திருமணமான 22-வது நாளில் கணவரை தீர்த்துக்கட்ட இளம்பெண் திட்டமிட்டதும், 5 பேர் கைது செய்யப்பட்டதும் கம்பம், கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion