மேலும் அறிய

குழந்தை திருமணம் செய்து வைத்த விவகாரம் : சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் கைது!

குழந்தை திருமணம் செய்து வைத்த விவகாரம்: சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் கோயில் அலுவல் ரீதியாக இந்து சமய அறநிலையத் துறை ஆய்விற்கு எதிர்ப்பு தெரிவித்தது, கனக சபை மேடை மீது பக்தர்கள் ஏறி வழிபாடு செய்வதற்கு இருந்த தடை விதித்தது, கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்த பெண் பக்தர் ஒருவரை சாதியை குறிப்பிட்ட இழிவாக பேசியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக ஆய்வுகளும் விசாரணைகளும் நடைபெற்று வருகிறது. 
 
இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக குழந்தை திருமணங்கள் செய்து வைப்பதாக புகார் எழுந்தன.
 
மாவட்ட சமூக நலத்துறைக்கு வந்த தகவல் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டில் 13 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த காரணத்திற்காக சிதம்பரம் நடராஜர் கோயில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், மற்றும் சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேசன் இருவரையும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 
 
கடந்த 2021-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் நடைபெற்ற இந்த திருமணத்தின்போது, திருமணம் செய்து வைத்த சிறுமிக்கு வயது 13 என்றும், மாப்பிள்ளைக்கு 17வயது என்றும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் சிதம்பரம் விசாரணை மேற்கொண்டார். பிறகு இருவரையும் சிதம்பரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். அதையடுத்து இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து சிதம்பரம் சிறையில் அடைத்தனர்.
 
முன்னதாக இந்த சம்பவம் குறித்து மற்ற பொது தீட்சிதர்களுக்கு தகவல் தெரிந்ததால் கோயில் கோபுர வாயில் முன்பு உள்ள சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் தீட்சிதர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சித்தர்களை போலீசார் கைது செய்து திருமணம் மண்டபத்தில் அடைத்தனர். இதற்கிடையில் 50-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கோயில் வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இரவு முதல் நள்ளிரவு வரை சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயில் அருகே பரபரப்பாக காணப்பட்டது.
 
கடந்த 2021 ஜனவரி 25-ஆம் நாளன்று அதிகாலை 4.30 முதல் 6 மணிக்கு இந்த திருமணத்தை செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அவர்களது பிள்ளைகள் குழந்தை திருமணம் செய்து வைத்தது தொடர்பான தகவல் மற்றும் ஆதாரம் எங்களுக்கு கிடைத்தது. அந்த ஆலயத்தின் மையமாக கொண்டு, சமூக நலத்துறை சார்பில் காவல் துறையிடம் சமூக நலத்துறை அலுவலர் மீனா புகார் அளித்ததாக சமூக நலத்துறை அதிகாரி தெரிவித்திருந்தார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் பேசுகையில், குழந்தை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குழந்தை திருமணத்தால் ஏற்படும் சமூக சீர்கேடுகள், அதனால் அந்த குழந்தைக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இதை நடைமுறையில் வைத்துள்ள வழக்கமாக கருதி இவ்வாறு குழந்தை திருமணம் செய்து வருகின்றனர். ஆனால் இது சட்டத்துக்கு புறம்பானது. தற்போது விதிமுறையை மீறி குழந்தை திருமணம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.
 
இதுதொடர்பாக போராட்டத்தின்போது, அவர்களிடம் தொடர்ந்து புரிய வைத்தோம். பலர் அதை உணராமல் இருந்தனர். பின்னர் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அதன் தன்மையை உணர்ந்து ஒதுங்கிவிட்டனர்.  கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தில் இந்த வருடம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தீட்சிதர்கள் தரப்பில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுஎன்று காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
Embed widget