மேலும் அறிய

விவாகரத்து கடிதம் பெற்றுத்தர ரூ.5000 லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது

ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்துடன் நேற்று இரவு அய்யப்பன் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.

கடலூர் அருகே மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர ரூ.5000 லஞ்சம் வாங்கிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்‌.
 
கடலூர் அருகே உள்ள புலியூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனி(30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு அய்யப்பன் கடலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு விசாரணைக்கு ரஞ்சனி ஆஜராகவில்லை. இதனால் தனது மனைவியிடம் விவாகரத்து செய்வது தொடர்பாக கடிதம் பெற்று தருமாறு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அய்யப்பன் மனு அளித்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 
 
இதையடுத்து நெய்வேலி காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம்(55) அய்யப்பனிடம் விசாரணை நடத்தினார். அப்போது வழக்கு சம்பந்தமாக மனைவிடம் விவாகரத்து கடிதம் பெற்று தர தனக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என பாலசுந்தரம், அய்யப்பனிடம் கேட்டுள்ளார். 
 
லஞ்சம் கொடுக்க விரும்பாத அய்யப்பன், இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின்படி ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்துடன் நேற்று இரவு அய்யப்பன் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
 
பின்னர் அங்கிருந்த பாலசுந்தரத்திடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் சியாம் சுந்தர் என்பவர் விசாரணைக்கு வந்தவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது லஞ்ச வழக்கில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைதான சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

Embed widget