மேலும் அறிய
Advertisement
விருத்தாசலத்தில் குழந்தைக்கு பாலியல் சீண்டல்; நீக்கப்பட்ட திமுக கவுன்சிலர் போக்சோவில் கைது?
5 வயது பள்ளி குழந்தைக்கு பாலியல் சீண்டல் பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது?
பள்ளி தாளாளர் ஆன திமுக கவுன்சிலர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைமை அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்தி நகரில் உள்ள பிரைமரி நர்சரி பள்ளியில் 5 வயது சிறுமி யுகேஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமி, வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட சிறுமியின் தாய் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து விருத்தாச்சலம் மகளிர் காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்திருந்தது உறுதி செய்த பின்னர் இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
அந்த விசாரணையில் பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாக அதிகாரி பக்கிரிசாமி என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி தாளாளர் பக்கிரி சாமி விருத்தாச்சலம் நகராட்சி 30 வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையி்லும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார் என திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளனர்.
திமுக தலைமை நடவடிக்கை எடுத்த பின்னர் விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார். மேலும், அவர் போக்சோவில் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 5 வயது பள்ளி குழந்தைக்கு பாலியல் சீண்டல் ஏற்படுத்திய சம்பவம் விருத்தாச்சலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion