மேலும் அறிய
Advertisement
‛நள்ளிரவில் போன் செய்த உதவியாளர்... உடல் முழுக்க காயம்...’ திமுக எம்.பி., FIRல் உள்ளது இது தான்!
‛‛அவர்கள் பண்ருட்டி GH சென்று அங்குள்ள பிரேதத்தை பார்த்து, உடல் முழுவதும் காயம் உள்ளது எனவும் ரத்தக்கறை படிந்திருத்ததையும் படம் பிடித்து செல்போனில் எனக்கு அனுப்பி வைத்தார்கள்..’
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள கடலூர் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் நடந்த கொலை வழக்கில் சரணடைந்த எம்பி ரமேஷ் மூன்று மணி நேர சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கடலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. சந்தேக வழக்காக இருந்த இந்த வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி விசாரணையில் மாற்றப்பட்டது.
இந்நிலையில் எம்பி ரமேஷ் மற்றும் அவரது ஊழியர்கள் மீது கொடுக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. கொலையான கோவிந்தராசுவின் மகன் செந்தில் வேல் கொடுத்த புகாரின் பேரில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதோ அதன் விபரம்...
புகார்தாரர்: செந்தில்வேல், வயது 38 S/O கோவிந்தராசு, வடக்கு தெரு. மேல் மாம்பட்டு, பண்ருட்டி -TK.
விசாரணை அதிகாரி: காவல் ஆய்வாளர் அவர்கள், காடாம்புலியூர் காவல் நிலையம் காடாம்புலியூர்,
ஐயா, நான் தற்பொழுது சென்னையில் வேலை செய்து வருகிறேன். எனது அப்பா கோவிந்தராசு, S/O, கோதண்டபாணி என்பவர் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள TRV ரமேஷ் அவர்களுக்கு சொந்தமான TRV Gayathiri cashews, பணிக்கன்குப்பம் கம்பெனியில் சுமார் 7 வருட காலமாக பணிக்கண்குப்பம் கிளையில் வேலை செய்து வருகிறார். வழக்கமாக காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். கடந்த ஒரு வார காலமாக கம்பெனியில் 'ஓரயஞ்சனையாக நடத்துகிறார்கள்; காலப்போக்கில் சரியாகி விடும் என சிவசங்கர பூபதி, லோகநாதன் ஆகியோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் நேற்று (19.09.2021 ) காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று விட்டார். ஆனால் இரவு வீடு திரும்பவில்லை. அதாவது 20.9.2021 அன்று அதிகாவை சுமார் 2:25 மணிக்கு எனது அப்பா செல்போனிலிருத்து எனக்கு போன் வந்தது. அப்பொழுது TRV Ramesh MP அவர்களின் உதவியாளர் பேசுவதாகவும், எனது அப்பா TRV Ramesh முந்திரி கம்பெனியில் மருந்து குடித்து விட்டதாகவும் அவரை பண்ருட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது டாக்டர் அவர் இறந்து விட்டதாக அறிந்ததாகவும் தகவல் தெரிவித்தார். நான் உடனடியாக எனது பெரியப்பா மகன் ரகுராமன் மற்றும் ஆனந்தராஜ் அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் பண்ருட்டி GH சென்று அங்குள்ள பிரேதத்தை பார்த்து உடல் முழுவதும் காயம் உள்ளது எனவும் ரத்தக்கறை படிந்திருத்ததையும் படம் பிடித்து செல்போனில் எனக்கு அனுப்பி வைத்தார்கள், அந்த படத்தில் அப்பாவுடைய இடது கண் மற்றும் உடல் முழுவதும் காயம் மற்றும் ரத்தக்கறைகள் இருந்தன. எனது அப்பா நல்ல மனநிலையில் இருந்தார். அதனால் அவர் மருந்து குடிக்க வேண்டிய அவசியமில்லை. நான் விசாரித்து பார்த்ததில் (1). TRV Ramesh MP மறும் அவரது PA (2), நடராஜ் மற்றும் கம்பெனி மேலாளர் கந்தவேல் மற்றும் அல்லாபிச்சை மற்றும் வினோத் மற்றும் அவரது கம்பெனி ஆட்கள் அடித்ததால் தான் இறத்து உள்ளார், எனவே தந்தையை கொலை செய்தவர்கள் மீது தக்க முடிககை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என கூறப்பட்டிருந்தது ஆதலால் இதனை காடம்புலியூர் காவல் நிலைய குற்ற எண்: 5621/021 U/S 174 CrPC (சந்தேக மரணம்) என வழக்கு பதியப்பட்டது,
என அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion