Crime: 11-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. விசாரிக்கப்படும் பத்தாம் வகுப்பு மாணவன்.. பள்ளி வளாகத்தில் குழந்தை சடலம்..
அரசுப் பள்ளியில் ஆண் குழந்தை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பம் ஆகியதும் மாணவி கழிவறையிலேயே குழந்தை பெற்றெடுத்து புதரில் வீசி சென்று சம்பவம் புவனகிரியில் பொரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், புவனகிரியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில். இந்த நிலையில் பள்ளியில் கழிவறை அருகில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் இறந்து கிடப்பதை கண்ட மாணவிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் புவனகிரி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் விரைந்து வந்த ஆய்வாளர் சரஸ்வதி, உதவி ஆய்வாளர் சந்தோஷ் கழிவறை இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து. குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி வளாகத்தில் ஆண் குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது புவனகிரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மாணவியரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி அந்தப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் ஊரை சார்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் தான் மாணவியின் கர்பத்திற்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க:14 வயது பழங்குடியின சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. பதைபதைக்கும் நிலையில் மீட்கப்பட்ட உடல்..
மேலும் காவல்துறையினர் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பம் ஆகியதும் மாணவி கழிவறையிலேயே குழந்தை பெற்றெடுத்து புதரில் வீசி சென்று சம்பவம் புவனகிரியில் பொரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியரின் பைக்கை தொட்டதால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட பட்டியலின மாணவன்..
உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியரின் பைக்கை தொட்டதற்காக 6ஆம் வகுப்பு பயிலும் தலித் சிறுவன் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராணாபூரில் உள்ளது அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று. அங்கு ஆசிரியராக பணியாற்றுகிறார் கிருஷ்ண மோகன் சர்மா. இவருடைய வாகனத்தை தலித் மாணவர் ஒருவர் தொட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர் மாணவனைத் தாக்கியுள்ளார். அதுவும் ஒரு அறையில் பூட்டிவைத்து இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். அந்த மாணவனின் கழுத்தையும் கொலைவெறியுடன் நெறித்துள்ளார். சக ஆசிரியர்கள் மாணவனை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நக்ரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆசிரியர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், உறவினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க:பிளாஸ்டிக் பையில் கிடந்த தொழிலதிபரின் உடல்... சென்னையில் பயங்கரம்... 6 தனிப்படைகள் தீவிர விசாரணை