பறிபோன 22 உயிர்கள்.. காத்திருந்து ஸ்கெட்ச் போட்ட போலீஸ்.. ஹவாலா ஏஜென்ட்.. சாராய சிண்டிகேட் சிக்கியது எப்படி ?
செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் வழக்கில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
சில மாதங்களுக்கு முன்பு விஷ சாராயம் குடித்ததில், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர தேர்தல் வேட்டையை ஈடுபட்டு சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டும், சாராய உரல்கள் அழிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்படும் எரிச்சாராயங்கள் பிற மாநிலங்களில் இருந்து வருவதால், காவல்துறையினர் அது குறித்தும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ரகசிய தகவல்
இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுராந்தக துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் பேரில் மதுராந்தகம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 17ஆம் தேதி, சுமார் 6105 லிட்டர் எரிச்சாராயம் பறிமுதல். மேகவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறையினர் பாணியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கிஷோர் என்பவர், மூலமாக போபால், ஹைதராபாத் பகுதியில் இருந்து எரி சாராயம் கொண்டு வந்தது தெரிய வந்தது.
விரிவடைந்த விசாரணை
இதனை அடுத்து கிஷோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் மதுவிலக்கு குற்றவாளியான, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனசேகரன் ( 50 ) என்பவர் போபால் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இருந்து எரிச்சாராயத்தை மேகவண்ணன் மூலமாக எடுத்து வந்து தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் விநியோகம் செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து தனசேகரனை விசாரணை செய்ததில், இவர் 8 மாதங்களாக இடைத்தரகராக செயல்பட்டு தெலுங்கானா மாநிலம் மல்கஜ்கிரியை சேர்ந்த , சுரேஷ்குமார் மற்றும் ஹவாலா ஏஜென்ட் மூலமாக 6 முறை கோபாலில் இருந்து எரிச்சாராயம் கொண்டு வந்து, பல்வேறு இடங்களில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
கை மாறி கை மாறி
இடைத்தரகரான சுரேஷ்குமார் கொடுத்த வாக்குமூலத்தில் மேகவண்ணன் லாரியுடன் போபால் சென்று போபாலை சேர்ந்த குருமித் சிங் சாசன் என்பவரிடம் இருந்து எரிச்சாயம் வாங்கி வருவது தெரியவந்தது. இதன் அடிப்படையில் மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளர் தர்மலிங்கம் தலைமையிலான சிறப்பு படை அமைக்கப்பட்டு குருமித் சிங் சாசன் என்பவரை கைது செய்தனர். இதனை அடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், போபாலில் இயங்கி வரும் தனியார் கம்பெனியிலிருந்து எரிச்சாராயத்தை புரோக்கர்கள், குருமித் சிங் சாசன், ஹைதராபாத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் வாயிலாக மது கடத்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் தனசேகரன் என்பவரிடம் வந்தடைந்து, பின் இவரின் மூலமாக கிஷோர், மேகவண்ணன். லட்சுமிபதி, ராம்குமார் ராமகிருஷ்ணன் சங்கர் மற்றும் முரளி ஆகியோர் உதவியுடன் பல இடங்களுக்கு விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
அதிரடியாக கைது
இந்த வழக்கில் சுமார் 15க்கும் மேற்பட்டோரை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கில் எரிச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு கண்டெய்னர் லாரி கார்கள் டெம்போ ட்ராவலர் மற்றும் 17,000 லிட்டர் விஷச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் அடிப்படையில் மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளர் தர்மலிங்கம், கோபால் சென்று இருவரையும் கைது செய்து வந்தனர். இதுதொடர்பாக குருமித் சிங் சாசன் என்பவரையும் கைது செய்தனர். அதேபோன்று சுமார் பத்துக்கும் மேற்பட்ட சாராய வியாபாரிகள் மற்றும் புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்ட ஒரு கண்டெய்னர் லாரி இரண்டு கார்கள் டாடா லாரி ஒரு டெம்போ டிராவல் இருசக்கர வாகனங்கள் ஆகியோ பறிமுதல் செய்யப்பட்டது மட்டும் இல்லாமல் 17,000 லிட்டர் எரிச்சாராயத்தையும் கைப்பற்றியுள்ளனர்.