மேலும் அறிய

வேலூரின் பிரபல ரௌடிக்கு மாவு கட்டு போட்ட காவல் துறை - யார் இந்த வசூர் ராஜா..?

தமிழகம் முழுவதுமுள்ள கூலிப்படைத் தலைவன்களுடன் வசூர் ராஜாவுக்கும் தொடர்பிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் ஓ.எஸ்.பாஷா. பெயிண்ட் கடை வைத்து நடத்தி வரும் இவர், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், என்னை 9 மாதங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு தான் வசூரை சேர்ந்த ராஜா பேசுவதாகவும், எனக்கு மூன்று லட்சம் ரூபாயை தர வேண்டும் இல்லை எனில் தன்னையும் தனது குடும்பத்தாரையும் கொன்று விடுவதாகவும் கூறி மிரட்டி உள்ளார். இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி பாஷா மற்றும் அவரது கடையில் வேலை பார்க்கும் சலீம் ஆகிய இருவரும் ஷூ கம்பெனிக்கு சென்று கொண்டிருக்கும்போது அவர்களைப் பின் தொடர்ந்து காரில் வந்த வசூர் ராஜா மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் இருவரும் பாட்ஷா மற்றும் சலிமை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

 


வேலூரின் பிரபல ரௌடிக்கு மாவு கட்டு போட்ட காவல் துறை - யார் இந்த வசூர் ராஜா..?

 

நாளை உன் கடைக்கு வருவேன் ரூ.5 லட்சம் பணத்தை தயார் செய்துவை இல்லையெனில் உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு சென்றதாகவும், மேலும் தான் வைத்திருந்த 20,000 ரூபாய் ரொக்க பணத்தை பறித்துக் கொண்டு மீண்டும் நாளை வருவோம் பணத்தை தயார் செய்துவை என மிரட்டி சென்றுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், குற்றவாளிகளை பிடிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி வசூர் ராஜா மற்றும் அவனது கூட்டாளி வெங்கடேசன் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 


வேலூரின் பிரபல ரௌடிக்கு மாவு கட்டு போட்ட காவல் துறை - யார் இந்த வசூர் ராஜா..?

யார் இந்த வசூர் ராஜா ? 

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி புதுவசூரைச் சேர்ந்தவர் வசூர் ராஜா வயது (36). வேலூரில், ரௌடிசம் பெருகக் காரணமாக இருந்த சீனியர் ரௌடி இவர்தான். காவல்நிலையத்தில் வசூர் ராஜா மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட 50-க்கும் அதிகமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரௌடி வசூர் ராஜா 8 முறை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர் 2019-ல், மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில், சொகுசு காரில் வந்த ரௌடிக் கும்பல் 50 ரூபாய் கட்டணம் செலுத்த மறுத்து, அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அந்தச் சம்பவத்தில், கைதுசெய்யப்பட்ட ஆறு ரௌடிகளில் வசூர் ராஜாவும் ஒருவர் ஆவார். மதுரையில் அவர் சிக்கிய பின்னரே, தமிழகம் முழுவதுமுள்ள கூலிப்படைத் தலைவன்களுடன் வசூர் ராஜாவுக்கும் தொடர்பிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மதுரை சிறையிலிருந்து வெளியில் வந்த வசூர் ராஜாவை கர்நாடகா காவல்துறையினர் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக கைது செய்தனர். பெங்களூரு சிறையிலிருந்து ஜாமீனில் வந்த ராஜா, சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரௌடி செல்லதுரை கொலை வழக்கில் தேடப்பட்டார். பின்னர், ஆத்தூர் நீதிமன்றத்தில் வசூர் ராஜா சரணடைந்தார். நீதிமன்றக் காவலில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட வசூர் ராஜா, அங்கிருந்தும் ஜாமீனில் வந்த பின்னர், கர்நாடகா, ஆந்திரா என அருகிலுள்ள வெளி மாநிலங்களில் பதுங்கியிருந்தபடி, வசூர் ராஜாவின் ஆட்கள் மூலம் தமிழ்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget