Crime : ஆணாக மாற விரும்பிய பெண்.. கொலை செய்த மந்திரவாதி.. உடந்தையாக இருந்த காதலி...சதி அம்பலம்...!
தன்பாலின ஈர்ப்பாளரான இளம்பெண்ணை ஆணாக மாற்றுவதாக கூறி, மந்திரவாதி அவரை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : தன்பாலின ஈர்ப்பாளரான இளம்பெண்ணை ஆணாக மாற்றுவதாக கூறி, மந்திரவாதி அவரை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் எதிர்ப்பு
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஷாஜஹான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பூனம் (27). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கு அதே கல்லூரியில் படித்து வரும் பீர்த்தி என்ற ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். தன்பாலின ஈர்பாளர்களான இருவரும் கடந்த சில நாட்களாகவே உறவில் இருந்துள்ளனர்.
இதுபற்றி அப்பகுதியினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் பெண்களின் இருவீட்டாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அக்கம் பக்கத்தினருக்கு இந்த விஷயம் தெரிந்ததால், அவர்களின் பெற்றோர்கள் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
சதி திட்டம்
இந்நிலையில், ஆணாக மாறி பீரித்தியை திருமணம் செய்து கொள்ளலாம் என்று யோசனை செய்துள்ளார் பூனம். இதனை அறிந்த பிரீத்தியின் தாயார், ஒரு சதித்திட்டத்தை போட்டுள்ளார். அதாவது, ஆணாக மாற விரும்பும் பூனத்தை கொலை செய்ய, திட்டம் போட்டுள்ளார் பிரீத்தியின் தாயார் ஊர்மிளா. தாயார் ஊர்மிளா, ராம் நிவாஸ் என்ற மந்திரவாதியை சந்தித்து பெரும் சதித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.
பூனமை கொலை செய்தால் ரூ.1.5 லட்சம் தருகிறேன் என மந்திரவாதியிடம் கூறிய பீரித்தியின் தாயார் ஊர்மிளா, முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை கொடுத்துள்ளார். மந்திரவாதியான ராம் நிவாஸை பூனமிடம் அறிமுகம் செய்து இவர் உன்னை ஆணாக மாற்றிவிடுவார் என்று கூறியுள்ளார்.
விசாரணையில் அம்பலம்
இதனை அடுத்து, ஏப்ரல் 18-ஆம் தேதி பூனம் வீட்டை விட்டு சென்றுள்ளார். அதன்பின்னர், ஒரு வாரமாக பூனம் மாயமானது குறித்து அவர்களது வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் பூனமின் சகோதரர் இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். செல்போனை கண்காணித்ததில் பூனம், மந்திரவாதி ராம் நிவாஸிடம் நீண்ட நேரமாக பேசியது தெரிய வந்துள்ளளது.
உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, தன்பாலின ஈர்ப்பாளரான பூனத்தை ஆணாக மாற்றுவதாக கூறி கோமதி நதிக்கரையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று, அவரின் கண்களை கட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்றும், அவரது உடலை புதருக்குள் மறைத்து வைத்ததாகவும் ராம் நிவாஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறிப்பாக இந்த கொலைக்கும் பிரீத்திக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, மந்திரவாதி ராம் நிவாஸ், பிரீத்தி ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரீத்தியின் தாயார் ஊர்மிளாவை போலீசார் தேடி வருகின்றனர்.