(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 8 மணி நேரத்தில் மீட்பு: கடத்திய பெண் சிக்கியது எப்படி?
வேலூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் 8 மணி நேரத்தில் மீட்டு கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்
வேலூர் (Vellore News) திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மனைவி சூரியகலாவுக்கு வயது (37) சூரியகலாவிற்கு காது மற்றும் வாய் பேச முடியாதவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஏற்கெனவே சூரிய கலா, சுந்தர் தம்பதியினருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளநிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கருத்தடை செய்வதற்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சூரிய கலாவை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து, நேற்று மதியம் சூரிய கலா உணவு உட்கொள்வதற்கு வெளியே வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத பெண்ணோடு இணைந்து உணவு உட்கொண்டுள்ளார். பணியாளர் தேர்வாணையம் SSC Exam 2023 Schedule: மத்திய அரசுப் பணிக்கான தேர்வுகள் எப்போது?- அட்டவணை வெளியிட்ட பணியாளர் தேர்வாணையம்
காவல்துறையினர் விசாரணை
உணவு உட்கொண்ட சிலமணி நேரத்தில் சூரியகலா மயக்கமடைந்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்தபின் எழுந்தபோது குழந்தை காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் விசாரித்தும் குழந்தை கிடைக்காததால் உடனடியாக காவல்துறையினருக்கு குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சூரியகலாவுடன் உணவு சாப்பிட்ட பெண்தான் குழந்தையை திருடியிருக்க வேண்டும் என கருதிய காவல்துறையினர் மருத்துவமனை வார்டிலிருந்த பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். Rajinikanth Yogi Adityanath: காலில் விழுந்த காலா' பற்றி கருத்து கேளுங்கள்...ரஜினியை விமர்சித்து பதிவிட்ட ப்ளூ சட்டைமாறன்...
ஆண்குழந்தையை கடத்திய பெண்( child kidnapped)
அதில் மெட்டை தலையுடன் கூடிய பெண் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் பிரசவ வார்டில் குழந்தையை கடத்திச்சென்ற பெண், சில பொருட்களை விட்டுச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்ததில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை சேர்ந்த பத்மா என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண்ணிண் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற பெண் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பிடிபட்டார். அவரிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மா என்ற பெண்ணை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கடத்தப்பட்ட சுமார் 8 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.