மேலும் அறிய

Crime: ஆரணி பகுதியில் பைக்கை திருடும் பலே திருடன் கைது.! போலீசில் சிக்கியது எப்படி.?

ஆரணி களம்பூர் சேத்துப்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்களை இருட்டிய வாலிபரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.அவரிடம் இருந்து மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மறுசூரைச் சேர்ந்தவர் சுரேஷ் இவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க இந்தியன் வங்கிக்கு கடந்த 24-ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது வங்கி முன்பாக இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் அந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்று விட்டார். இது குறித்து ஆரணி நகர காவல்துறையினரிடம் சுரேஷ் புகார் அளித்துள்ளார் . அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேபோல் களம்பூர் அடுத்த எட்டவாடியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அவர்களது இரு சக்கர வாகனத்தை கூட்ரோடு அருகே நிறுத்திச் சென்றுள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்று உள்ளார். இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில்  களம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Crime: ஆரணி பகுதியில் பைக்கை திருடும் பலே திருடன்  கைது.! போலீசில் சிக்கியது எப்படி.?

சேத்துப்பட்டு பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு 

மேலும் இதே போன்று சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை பேருந்து நிலையம் அருகில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்  திருடி சென்றுள்ளார். இது குறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில்  சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில், ஆய்வாளர் விநாயகமூர்த்தி, துணை ஆய்வாளர் சுந்தரேசன் ,சங்கர், ஆனந்தன் ஆகியோர் காமராஜர் சிலை அருகில் வாகன சோதனையில் நேற்று மாலை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் மடக்கி விசாரணை செய்தனர். அந்த  வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

Crime: ஆரணி பகுதியில் பைக்கை திருடும் பலே திருடன்  கைது.! போலீசில் சிக்கியது எப்படி.?

இருசக்கர வாகனத்தை திருடிய திருடன் கைது 

அதனை தொடர்ந்து அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாதுரை சேர்ந்த தனுஷ் என்கிற வீரா வயது (23) என்பதும் ஆரணி, களம்பூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் 3 இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்துள்ளது. தனுஷ் கொடுத்த தகவலின் பெயரில் தேடப்பட்ட மூன்று இரு சக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதோடு மட்டுமின்றி தனுஷ் மீது சென்னை, விழுப்புரம், சேத்துப்பட்டு உட்பட பல காவல் நிலையங்களில் வழிப்பறி, இரு சக்கர வாகன திருட்டு மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தனுஷை ஆரணி நகர காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆரணி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்
Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்
Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.? கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
Tirupati Temple: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை எப்போது?
Tirupati Temple: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்
Priest Controversy Speech | ’’தாமரை மலர வேண்டும்’’கோயில் குருக்கள் சர்ச்சை பேச்சு வைரல் வீடியோ
PTR vs Moorthy |
Madhampatti Rangaraj vs Joy Crizilda | ’’ HELLO HUSBAND!தைரியம் இருந்தா வாங்க’’மாதம்பட்டி vs ஜாய்
அமைச்சர்கள் திடீர் ஆய்வு பினாயில் ஊற்றி வரவேற்பு மருத்துவமனையில் வேடிக்கை | Madurai Goverment Hospital

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்
Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்
Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.? கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
Tirupati Temple: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை எப்போது?
Tirupati Temple: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை எப்போது?
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
’10 தொகுதிகளையும் ஜெயிப்பேன்’ அமைச்சர் மூர்த்தி சூளுரை..!
’10 தொகுதிகளையும் ஜெயிப்பேன்’ அமைச்சர் மூர்த்தி சூளுரை..!
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
Embed widget