மேலும் அறிய

Crime: அலறி துடித்த 10 வயது சிறுவன்.. இரக்கமே இல்லாமல் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்- பஞ்சாபில் ஷாக்

பஞ்சாப் மாநிலத்தில் 10 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Crime: பஞ்சாப் மாநிலத்தில் 10 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு பொறுப்பு அதிகம். ஆனால், சில ஆசிரியர்கள் மிகவும் மோசமாக நடத்துக் கொள்கிறார்கள். நற்பண்புகளை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரிகளில் விளிம்பு நிலை மாணவர்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் சமூகம் எந்தளவுக்கு பின்தங்கியுள்ளது என்பதை காட்டுகிறது.

சமீபத்தில் கூட சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் சக மாணவர்களை விட்டு, இஸ்லாமிய சிறுவனை ஆசிரியை அறையச் சொன்ன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தற்போது பஞ்சாப் மாநிலத்தில் 10 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

10 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்:

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருக்கும் ஒரு பள்ளியில் 10 வயது பள்ளி மாணவனை ஒரு ஆசிரியர் ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கியுள்ளார். அதாவது, இரண்டு மாணவர்களை அழைத்து அந்த சிறுவனின் கை, கால்களை பிடித்து கொள்ள வைத்து, குச்சியால் கொடூரமாக தாக்கியுள்ளார். அந்த சிறுவனை மிகக் கொடூரமாக தாக்கிய ஆசிரியர், இதுகுறித்து வீட்டில் சொல்லக் கூடாது என்று மிரட்டி இருக்கிறார்.

இதுபற்றி வீட்டில் சொன்னால் பள்ளியில் இருந்து டிசி கொடுத்துவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் அந்த சிறுவனும் இதுப்பற்றி வீட்டில் சொல்லாமல் பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தார். இரண்டு  நாட்கள் அந்த சிறுவனை ஆசிரியர் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்திருக்கிறார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் சிறுவன் முதலில் எதையும் சொல்லாமல் அமைதியாகவே இருந்துள்ளார்.

ஷாக் வீடியோ: 

இருப்பினும், அந்த சிறுவன் நடக்கும்போது  சிரமப்படுவதை அவரது தாய் பார்த்துள்ளார். இதனால், சிறுவனிடம் என்னாச்சு என்று கேட்டிருக்கிறார். அதன்பிறகு பள்ளியில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தாயிடம் கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த தாய், முதலில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். பின்னர், இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில், இரண்டு மாணவர்கள் பிடித்துக் கொள்ள அந்த ஆசிரியர் 10 வயது சிறுவனை கொடூரமாக தாக்கியிருக்கிறார். அந்த சிறுவன் தள்ளி செல்ல முயன்றார். அப்போது கூட, தொடர்ந்து அந்த ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர் ஷெர்பூர் கலான் பகுதியைச் சேர்ந்த   ஸ்ரீ பகவான் என அடையாளம்  காணப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget