Crime: கர்ப்பிணிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! தீ வைத்து எரித்த கொடூர கும்பல் - நடந்தது என்ன?
மத்திய பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தீ வைத்து எரித்த சம்மபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: கர்ப்பிணிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! தீ வைத்து எரித்த கொடூர கும்பல் - நடந்தது என்ன? Crime Pregnant Woman sexually assault Set On Fire In Madhya Pradesh Crime: கர்ப்பிணிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! தீ வைத்து எரித்த கொடூர கும்பல் - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/719549e0d75291df27adf30786d5353e1708174961835102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Crime: மத்திய பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ வைத்து எரித்த சம்மபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.
கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை:
இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் வன்முறறை சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது மத்திய பிரதேசத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது, மத்திய பிரதேச மாநிலம் அம்பா நகரில் உள்ள சந்தகாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான கர்ப்பிணி பெண். இவரது கணவர் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். இந்த வழக்கில் தனது கணவர் மீது குற்றம் சுமத்திய பெண்ணிடம் சமரச பேச்சுவார்த்தைக்கு சந்த்கரா புரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு கர்ப்பிணி பெண் சென்றிருக்கிறார்.
தீ வைத்து எரித்த கொடூரம்:
அந்த வீட்டில் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் நான்கு பேர் இருந்துள்ளனர். அந்த மூன்று ஆண்கள் கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த 3 பேரும் கர்ப்பிணி பெண்ணை தீ வைத்து எரித்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, அங்கிருந்து 3 பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில், பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்திருக்கின்றனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணும் வாக்குமூலம் அளித்தார். இதனை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Crime: கொலையில் முடிந்த காதல்! பட்டப்பகலில் 18 வயது இளைஞனை வெட்டிக் கொன்ற சிறுவன் - கோவையில் கொடூரம்
Crime: கையில் துண்டிக்கப்பட்ட மனைவியின் தலை! சாலையில் நடந்து சென்ற கணவன் - அலறிய மக்கள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)