மேலும் அறிய

மதுரையில் காவலர் எரித்துக் கொலை.. ஆட்டோ டிரைவரை சுட்டுப் பிடித்த போலீஸ் !

காவலர் மலையரசன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் வில்லாபுரத்தை சேர்ந்த மூவேந்தர் என்ற ஆட்டோ ஓட்டுனரை துப்பாக்கியால் காவல்துறையினர்  சுட்டுப்பிடித்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தரை கைது செய்ய முயன்ற போது, சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றபோது, மூவேந்தரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

சிறப்பு காவலர் எரித்துக் கொலை
 
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மலையரசன் (36). இவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார். இவருக்கு பாண்டிச் செல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்துவந்துள்ளார். கடந்த  சில நாட்களுக்கு முன் பைக் விபத்தில் பாண்டிச் செல்வி உயிரிழந்தார். இந்த சூழலில் மனைவி உயிரிழந்த சோகத்தில் பணியிலிருந்து சில நாட்கள் அனுமதி விடுமுறையில் இருந்துவந்துள்ளார். இந்த சூழலில், மலையரசனை காணவில்லை என உறவினர்கள் தேடிவந்தனர்.
 
போலீஸ் விசாரணை
 
இதனையடுத்து அவர் எங்கு சென்றார்.? என்பது தெரியாத நிலையில், தனிப்படை காவலரான மலையரசனின் நிலைகுறித்து தெரிந்துள்ளது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் காவலர் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தெரிந்தது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பெருங்குடி காவல்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மலையரசன் கொலை செய்யப்பட்டாரா.? தற்கொலையா.? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்தநிலையில் காவலர் மலையரசன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் வில்லாபுரத்தை சேர்ந்த மூவேந்தர் என்ற ஆட்டோ ஓட்டுனரை துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர். பணத்திற்காக எரித்துகொன்றதாக ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
ஆட்டோ ஓட்டுநருடன் காவலர் நட்பு?
 
காவலர் மலையரசனுக்கும் - ஆட்டோ ஓட்டுநர் மலையரசனுக்கும், நட்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது. ஆட்டோவில் காவலர் சவாரி சென்றபோது, ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் சேர்ந்து பெருங்குடி அருகே பைபாஸ் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது காவலர் மலையரசனிடம் பணத்தை பறித்த போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரை தலையில் பலமாக அடித்து ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்துவிட்டு, பின்னர் எரித்து பெருங்குடி அருகே வீசி சென்றதும் தெரியவந்துள்ளது.
 
துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது
 
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தரை கைது செய்ய முயன்ற போது சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பிவிடும் என்றபோது மூவேந்தரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து மூவேந்தர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலர் கொலையில் திருப்பம் குறித்து போலீஸ் முழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
 
 
 

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
Embed widget