மேலும் அறிய
Advertisement
Crime: சந்தனக் கட்டையை துண்டுகளாக்கி கட்டைப் பையில் போட்டு கடத்தல் - 3 பேர் கைது
கர்நாடகாவில் இருந்து ஒரு லட்சம் மதிப்பிலான 13.5 கிலோ சந்தனக்கட்டையை துண்டு துண்டாக உடைத்து கட்ட பையில் போட்டு கடத்தி வந்தனர்.
பெங்களுரூவில் இருந்து 13.5 கிலோ சந்தனக்கட்டை கடத்தி வந்த கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒப்பந்தவாடி அடுத்த இருளர் காலனி பகுதியைச் சேர்ந்த முனிசாமி மகன் காளியப்பன் (55) இவருடைய மனைவி பெரியபாப்பா மற்றும் அதே பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் மாணிக்கம் (55) ஆக மூன்று பேரும் கர்நாடகாவில் மேஸ்திரி வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், கர்நாடகாவில் இருந்து ஒரு லட்சம் மதிப்பிலான 13.5 கிலோ சந்தனக்கட்டையை துண்டு துண்டாக உடைத்து கட்ட பையில் போட்டு கடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது வெங்கங்களாபுரம் பகுதியில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூவரும் கொண்டு வந்த கட்டைப்பையை சோதனை செய்ததில் சந்தன கட்டை இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக இருவரையும் காவல் நிலையம் வைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மூன்று பேரையும் அதேபோல் கடத்தி வந்த சந்தனக்கட்டையும் திருப்பத்தூர் கிராமிய போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion