Crime : திருமணம் செய்துகொள்வதாக மோசடி.. இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. பின்பு நடந்தது இதுதான்..
மும்பையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Crime : மும்பையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்ணுக்கு தெரிந்த நபர்களாலேயேதான் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் பிரிஜேஸ் பால் (22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணுக்கு இவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் பிரிஜேஸ் பால் உறுதி அளித்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணும் இதை நம்பி கொண்டு அவருடம் நெருக்கமாக பழகி உள்ளார். சில நாட்களாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், அந்த திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இதற்கு பிரிஜேஸ் பால் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த நபர் மீது 21 வயதுடைய பெண் புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசார் பிரிஜேஸ் பாலை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
முன்னதாக, மும்பை : குர்லா காவல்துறைக்குட்பட்ட பகுதியில் 42 வயதான ஒரு பெண்ணை 3 பேர் சேர்ந்து கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்து, பின்பு சிகரெட் துண்டை வைத்து அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பு மற்றும் மார்பகப் பகுதியில் எரித்ததாக பாதிக்கப்பட்ட பெண் குர்லா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து குற்றவாளியான 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதிகரிக்கும் குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876 புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன. மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில் 1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Caste Violence : கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞர்.. கொள்ளிக்கட்டையால் தாக்கிய கொடூரம்..
Crime : 17 வயது சிறுவனுக்கு நடந்தது என்ன? செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கொடூரம்..!