Crime : ஆண் நண்பர்களுடன் ரீல்ஸ்...காதலியை கொன்று உடலை எரித்த காதலன்...என்ன நடந்தது...?
ஆண் நண்பர்களுடன் வீடியோ எடுத்த ஆத்திரத்தில் காதலியை கொலை செய்து உடலை எரித்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : ஆண் நண்பர்களுடன் வீடியோ எடுத்த ஆத்திரத்தில் காதலியை கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் நண்பர்களுடன் ரீல்ஸ்
கர்நாடக மாநிலம் பெங்களூரு யாதகிரி பகுதியைச் சேர்ந்தவர் மாருதி ராதோடு. இவர் அதே பகுதியில் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்டெலா வெர்மா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண் எப்போதும் செல்போனில் ரீல்ஸ் பயன்படுத்தி வரும் பழக்கம் உடையவர். இந்தநிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆண் நண்பர்களுடன் ரீல்ஸ் செய்து வந்துள்ளார்.
ஆனால் இதுபோன்று ஆண் நண்பர்களுடன் ரீல்ஸ் எடுத்து வருவது அந்த பெண்ணின் காதலன் மாருதி ராதோடுக்கு பிடிக்காமல் இருந்தது. இதனால் அவர் ரீல்ஸ் எடுப்பதை நிறுத்துமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் அதனை அந்த இளம்பெண் கேட்காமல் தொடர்ச்சியாக தனது ஆண் நண்பர்களுடன் வீடியோ எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, உத்தர பிரதேசத்தில் இருந்து ஒரு நாள் அந்த பெண்ணை பெங்களூருவுக்கு வரவழைத்தார். அப்போது, ஆண் நண்பர்களுடன் ரீல்ஸ் எடுப்பது பற்றி கேட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில், அந்த இளம்பெண்ணை அவரது காதலன் கடுமையாக தாக்கினார். பின்பு, அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
காதலன் வெறிச்செயல்
போலீசில் சிக்காமல் இருக்க அந்த பெண்ணின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். மேலும், அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன்பின்பு, மாருதி ராதோட்டை அவரது உறவினர்கள் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், ஆண் நண்பர்களுடன் வீடியோ எடுத்த ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் உடலை எரித்தாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலமே நடக்கிறது. தற்போது ஆண் நண்பர்களுடன் வீடியோ எடுத்த ஆத்திரத்தில் காதலியை ஏரித்து கொன்றது அப்பகுதியில் கர்நாடகவை தவிர இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க





















