மேலும் அறிய

Crime: மனநலம் பாதித்த நபரின் மரணம் கொலையா ? - சிவகங்கையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் !

”தாக்குதல் காரணமாக அவர் இறந்திருந்தால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” - ஏ.எஸ்.பி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது குன்றக்குடி முருகன் கோயில். இந்த கோயிலை சுற்றி ஏராளமான கிரமங்கள் உள்ளது. அதே போல் கோயிலை சார்ந்து பல்வேறு கடைகளும் இயங்குகிறது . இதன் மூலம் ஏராளமான குடும்பத்தினர் வருவாய் ஈட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற சூழலில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுற்றிவந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் பல்வேறு இடங்களுக்கு சென்று கிடைத்ததை வாங்கிச் சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். யாருக்கும் பெரிய தொந்தரவுகள் எதுவும் கொடுக்காமல் அப்பகுதியை சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.
 
Crime: மனநலம் பாதித்த நபரின் மரணம் கொலையா ? -  சிவகங்கையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் !
 
இந்நிலையில் குன்றக்குடி கோயில் வாசல் அருகே உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றுக்கு சென்றதாகவும், அப்போது அதன் கடை உரிமையாளர் தாக்கியதியதில் உடல் நலம் பாதித்து இறந்ததாக சொல்லப்படுகிறது. இறந்த  நபர் அடித்து துன்புறுத்திய காரணத்தால் தான் இறந்ததாகவும், எனவே  அவரை தாக்கிய நபர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Crime: மனநலம் பாதித்த நபரின் மரணம் கொலையா ? -  சிவகங்கையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் !
 
இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த நபர்களிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், “கடந்த 30-ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பையன் பேன்சி ஸ்டோர் கடை முன்பாக நின்றுகொண்டிருந்தார். இதையடுத்து கடையின் உரிமையாளர் பாலசுப்ரமணியன் மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து துன்புறுத்தினார். அங்கிருந்த கம்புகளை வைத்தும் தாக்கினார். உடலில் உள்ள முக்கிய உறுப்பின் மீது மிதித்ததில் அவர் கடுமையாக பாதித்து மயங்கினார். இதையடுத்து அனைவரும் செல்லவும் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்துவிட்டு மீண்டும் கடைபகுதிகளில் விட்டுவிட்டார். இந்நிலையில் உடல் நிலை மோசமடைந்து சளிகள் கக்கியபடி கடந்த 2-ம் தேதி இறந்துவிட்டார். மனநலம் பாதிக்கப்பட்டவர் தாக்குதல் காரணமாக இறந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்து வருகின்றனர். நான் சம்பவத்தை நேரில் பார்த்த விஷயங்கள் கேட்ட விஷயங்களை காவல்துறையினரிடன் தெரிவித்துள்ளேன்" என்றார்.

Crime: மனநலம் பாதித்த நபரின் மரணம் கொலையா ? -  சிவகங்கையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் !
 
போலீஸ் விசாரணை குறித்து  ஏ.எஸ்.பி ஸ்டாலின் கூறுகையில், “இது தொடர்பான விசாரணை நடத்த சொல்லி இருக்குகிறேன். மனநலம் பாதிக்கப்பட்டவரை கடையின் அருகே தள்ளி வேறு இடத்திற்கு செல்ல சொல்லியதாக தெரியவருகிறது. சி.சி.டி.வி கேமராக்களும் அப்பகுதியில் இல்லை. எனினும் உடல் கூறு ஆய்வில் வெளிவரும் தகவலின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது வரை வழக்கு சந்தேக மரணமாக பதியப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக அவர் இறந்திருந்தால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget