Crime: மனைவியின் தவறான உறவை கண்டித்த கணவர் கொலை... ஆலங்குளத்தில் பயங்கரம்..!
மனைவியின் தவறான உறவை கண்டித்த பழைய இரும்பு வியாபாரியான முத்துராமலிங்கராஜன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வட்டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன், இவருடைய மகன் முத்துராமலிங்கராஜன் (45). பழைய இரும்பு வியாபாரியான இவருக்கு உஷா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளது. இந்த நிலையில் முத்துராமலிங்கராஜனுக்கும், உஷாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். உஷா தனது தாய் வசிக்கும் ஏ பி நாடனூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு முத்துராமலிங்கராஜன் தனது தாயாரிடம் வெளியூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்று உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முத்துராமலிங்கராஜன் பூலாங்குளம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் அவரது கை, கால்கள் முறிந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் கிடைத்த தடயங்களை சேகரித்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது, வட்டாலூரை சேர்ந்த கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவிற்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த முத்துராமலிங்கராஜன் தனது மனைவியை கண்டித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் முத்துராமலிங்கராஜனை திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உஷாவை பிடித்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில் தப்பியோடிய கடல்மணியை தீவிரமாக தேடி வருகின்றனர். மனைவியின் தவறான உறவை கண்டித்த பழைய இரும்பு வியாபாரியான முத்துராமலிங்கராஜன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்