மேலும் அறிய

Crime : குஜராத்தில் பயங்கரம்...முன்னாள் காதலியை கொலை செய்த இளைஞர்...கல்லூரி வளாகத்திலேயே உடலை புதைத்த கொடூரம்...!

குஜராத் மாநிலத்தில் முன்னாள் காதலியை கொலை செய்து கல்லூரி வளாகத்திலேய புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : குஜராத் மாநிலத்தில் முன்னாள் காதலியை கொலை செய்து கல்லூரி வளாகத்திலேய புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் காதலி கொலை

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் வதஸ்மா என்ற பகுதியில் ஒரு மருந்தகக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வரும்  ஒரு மாணவியை கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை கல்லூரி வளாகத்தில் மறைத்து வைத்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பி உள்ளார். இதனை அடுத்து, கல்லூரி காவலாளி சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் இருந்தபோது பெண்ணின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.  

உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கல்லூரியில் உள்ள சிசிடிவி மேராக்களை ஆய்வு செய்தனர். அதில் மாணவியை கொலை செய்த நபரை அடையாளம் கண்டனர். பின்னர், தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டர். அப்போது விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்தார். 

கைது

அதன்படி, அந்த மாணவியும், இளைஞரும் ஒரே  கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துள்ளனர்.  இதனை அடுத்து, அந்த மாணவி மற்றொரு ஆண் நண்பருடன் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த அந்த இளைஞர் அத்திரமடைந்தார்.

இந்நிலையில், கடந்த 28ஆம்  தேதி புத்தகம் கொடுப்பதாக கூறி முன்னாள் காதலியை கல்லூரி வளாகத்தின் பின்பக்கத்திற்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். அப்போது அங்கு வந்த மாணவிக்கும் அந்த இளைஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் மாணவியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அங்கிருந்து  தப்பியுள்ளதாக வாக்குமூலம் அளித்தார்.

குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து முன்னாள் காதலியை கொலை செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

Murasoli: திமுக கூட்டணி கட்சியான சி.பி.எம். குறித்து முரசொலி விமர்சனம் - டி.கே.ரங்கராஜன் கருத்துக்கு எதிர்ப்பு!

Narasimha Jayanthi : இன்று நரசிம்ம ஜெயந்தி.. இந்த நாளின் வரலாறு, சிறப்புகள், பூஜை விவரங்கள் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget