Crime: பேச மறுத்த காதலி.. ஃபோனை கட் செய்ததால் விபரீதத்தை முயன்ற இளைஞர்.. சென்னையில் பயங்கரம்..
போனில் வாக்குவாதம் முற்றியதில் காதலி தன் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
![Crime: பேச மறுத்த காதலி.. ஃபோனை கட் செய்ததால் விபரீதத்தை முயன்ற இளைஞர்.. சென்னையில் பயங்கரம்.. Crime Chennai man set him on fire and attempts suicide as his girfriend refused to talk Crime: பேச மறுத்த காதலி.. ஃபோனை கட் செய்ததால் விபரீதத்தை முயன்ற இளைஞர்.. சென்னையில் பயங்கரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/05/42580e7552dd47649b7bf5569d4448db1659705278_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காதலி தன்னுடன் பேச மறுத்ததால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற காதலர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
காதலியுடன் முற்றிய வாக்குவாதம்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (24). சென்னை, ஆழ்வார்த்திருநகரில் உள்ள வாடகை வீடு ஒன்றில் நண்பர்களுடன் இவர் தங்கியுள்ளார். மேலும், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றி வரும் இவர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் பிரகாஷ் தன் காதலியுடன் வழக்கம்போல் இரவு மொபைல் போன் வழியாக பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காதலி கோபமாக தனது செல்போன் இணைப்பைத் துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தீவைத்து தற்கொலை முயற்சி
இச்சம்பவத்தால் விரக்தியடைந்த பிரகாஷ், தன் வீட்டில் இருந்த பெயின்ட் கலக்க பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து, பிரகாஷின் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அலறியடித்து சாலைக்கு ஓடிவந்துள்ளார்.
மேலும் படிக்க: Johnny Depp : ஒயின் பாட்டில்.. உடலுறவு.. போதை மருந்து.. அசிங்கமான வார்த்தைகள்.. ஜானி டெப் மீது மீண்டும் புகார்..
இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் கோணியைப் போர்த்தி தீயை அணைத்தனர். தொடர்ந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பிரகாஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், கோயம் பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)