மேலும் அறிய
Advertisement
Crime: நாகையில் ஏடிஎம் கொள்ளை முயற்சி விவகாரம் - இளைஞர் கைது
மோப்பநாய் துலிப் சம்பவ இடத்திலிருந்து, தெற்கு நோக்கி சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
வெளிப்பாளையத்தில் கனரா வங்கி ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சியில் தனிப்படை போலீசார் நாகையை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 10ம் தேதி ஏ.டி.எம். மையம் திறந்து கிடப்பதையும், உள்ளே எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டு வங்கி ஊழியர்கள் வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் DSP.பாலகிருஷ்ணன், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஏ.டி.எம். மையத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி, ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாறை வைத்து உடைத்ததும், பணம் எடுக்க முடியாமல் கொள்ளை முயற்சியை கைவிட்டுச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.
மேலும் மோப்பநாய் துலிப் சம்பவ இடத்திலிருந்து, தெற்கு நோக்கி சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் காவல் நிலையம் அருகே உள்ள டீக்கடையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற விஸ்வநாதனை தனிப்படை போலீசார் கைது செய்து வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion