மேலும் அறிய

Crime: மரக்காணம் பகுதியில் தொடர் வழிப்பறி; திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் கைது

=மரக்காணம் பகுதியில் தொடர் வழிப்பறி செய்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்குக் கடற்கரை சாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆட்சிக்காடு பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் தங்கச் செயின் மற்றும் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மோட்டார் பைக்கில் கணவனோடு அமர்ந்து வந்த பெண்ணின் தாலிச் செயின் போன்றவற்றை அடுத்தடுத்த நாட்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மோட்டார் பைக்கில் வந்து பறித்து சென்று விட்டனர்.

இதேபோல் மரக்காணம் மட்டும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் மரக்காணம் மற்றும் ஆட்சிக்காடு பகுதிகளில் தங்களது நகைகளை பறிகொடுத்தவர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்த புகாரின் மீது மரக்காணம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கோட்டகுப்பம் காவல்துறை துணை  கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் மரக்காணம் காவல்துறை ஆய்வாளர் பாபு மற்றும் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார் மணிமாறன் மற்றும் போலீசார் இன்று மரக்காணம் அருகே கிழக்குக் கடக்கற சாலையில் உள்ள அனுமந்தை சுங்கச்சாவடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி ஒரு ஸ்கார்பியோ கார் வேகமாக வந்தது இதன் இந்த காரை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் காரை மறித்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர் அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னாக தங்களது ஊர்களை மாற்றி கூறியுள்ளனர் இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மரக்காணம் காவல் நிலையம் அழைத்து வந்து முறையாக ரகசிய விசாரணை நடத்தினர் இந்த ரகசிய விசாரணையில் அவர்கள் கடந்த மூன்று மாதத்திற்கு முன் ஆட்சிக்காடு மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் முன் பெண்களிடமிருந்து நகைகளை பறித்து சென்றது குறித்து தெளிவாக கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த தனுஷ் வயது( 19) யோகேஷ் வயது (19 )அப்துல்லா வயது யோகேஸ்வரன் வயது (24 )மேகநாதன் வயது (19) அஜித் குமார் வயது (21 )சாந்தகுமார் வயது (21)ஆகியோர்களை கைது செய்தனர் மேலும் இவர்கள் தொடர் கொள்ளைக்கு பயன்படுத்தி வந்த ஸ்கார்பியோ கார் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் இவர்கள் வைத்திருந்த 6 சவரன் தங்க கட்டி போன்றவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் கைது செய்த நபர்களிடம் இதுபோன்று வேறு எங்கெங்கெல்லாம் வழிப்பறி கொள்ளை செய்தார்கள் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget