Crime: ஆரணி அருகே பயங்கரம்; மது போதையில் தகராறு... தடுத்த பால் வியாபாரி கொடூர கொலை
ஆரணி அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட நபர்களை தடுத்த பால் வியாபாரியை தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விளை சித்தேரி கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி சேட்டு வயது (30) என்பவருக்கு உமா என்ற மனைவியும் அருண்குமார் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர். மேலும் பால் வியாபாரி சேட்டு தினமும் விடிற்காலையில் பால் கறப்பதற்கு செல்வதல் விளை கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள நாகாத்தமன் கோவில் வளாகத்தில் தூங்குவது வழக்கமாக கொண்டுள்ளார். இதனையொடுத்து நேற்று இரவு அதே கிராமத்தை சேர்ந்த சிவக்குமர் என்பவரும் சிவசங்கர் என்பவரும் மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர். அப்போது தலைக்கு ஏறிய போதையில் ஒருவரை ஓருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அப்போது கோவில் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த சேட்டு சண்டை போட்டுகொண்டு இருந்த இருதரப்பினரையும் விலக்கி சமாதானம் செய்து வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவில் வளாகத்தில் வழக்கம்போல் சேட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் மீது சிவசங்கரன் ஹாலோ பிரிக்ஸ் கல்லை தலையிலும், மார்பு மீதும் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.பின்னர் விடியற்காலையில் பால் வியாபரத்திற்கு செல்பவர்கள் கோவில் வளாகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சேட்டுவின் சடலத்தை பார்த்து கிராம பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த வந்த ஆரணி தாலுக்கா காவல்நிலையத்தினர் சம்ப இடத்திற்கு விரைந்து கொலை செய்யப்பட்டு இருந்த பால் வியபாரி சேட்டுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பால் வியாபாரி கொலை செய்யப்பட்டு இருந்ததை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குடிபோதையில் பால் வியாபாரியை சிவசங்கரன் கொலை செய்தது தெரியவந்தது. சிவசங்கரனை கைது செய்ய காவல்துறையினர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் சிவசங்கரன் தலைமறைவு ஆகிவிட்டார்.
பின்னர் காவல்துறையினருக்கு சிவசங்கரன் விளை சித்தேரி கிராமத்தில் உள்ள விளை ஏரியில் முட்புதரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து விளை ஏரியில் பரிசல் படகில் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரனை தனிப்பட்டையினர் கைது செய்தனர். அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்