சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.5 கோடி மோசடி - திருவண்ணாமலையில் 100 இளைஞர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலையில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 150 பேரிடம் ரூ.1.5 கோடி மற்றும் பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொண்டு ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தn2nar
திருவண்ணாமலையை சேர்ந்த பிரேம்குமார் வயது ( 40) என்பவர் மயிலாடுதுறையில் அலுவலகம் வைத்து சிங்கப்பூரில் ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு நபரிடம் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் என வாங்கிக்கொண்டு அவர்களிடம் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக்கொண்டு அதற்கு பதில் மஞ்சள் பாண்ட் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு கடந்த ஆறு மாதமாக யாருக்கும் வேலை வாங்கி தராததால் பணம் கட்டி ஏமாற்றமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள கௌசி கார் அஸசரீஸ் சென்டர் நடத்தி வரும் பிரேம்குமாரிடமிடம் சென்று பணத்தை பறிகொடுத்த நபர்கள் பணத்தை திரும் கேட்டனர். அப்போது பிரேம் குமார் அவர்களிடம் பணத்தை தரமுடியாது உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பணத்தை திருப்பி பெற்றுத்தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென திருவண்ணாமலை வேட்டவலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சாலை மறியலில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையிலேயே அமர்ந்து பணம் கிடைக்கும் வரை இங்கேயே அமர்ந்திருப்போம் என்று தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறிய பிறகு சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். அதன் பிறகு காவல்துறையினர் பிரேம்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து மயிலாடுதுறை சேர்ந்த முருகன் தெரிவிக்கையில்;
அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150 நபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி வரை பணத்தை கட்டி ஏமாற்றம் அடைந்துள்ளோம், பலமுறை தொலைபேசி மூலமும், நேரிலும் பிரேம்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது கொடுக்க மறுத்ததால் இன்று நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கார் அசசரிஸ் சென்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டோம். தங்களிடமிருந்து பெற்ற பணத்தில் தான் அவர் புதிய கார், ராயல் என்பீல்ட் பைக், கார் ஆசஸரீஸ் சென்டர் உள்ளிட்டவற்றை நிறுவி செயல்படுத்தி வருகிறார். எனவே அவரிடம் இருக்கும் பொருட்களை விற்று பணத்தை தங்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்றும் கண்ணீர் மல்க இளைஞர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.அதேபோன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களிடம் பிரேம்குமார் பணம் கைவிட்டு பெற்றுக்கொண்டு வீடியோ ஆதாரத்தை வைத்து இளைஞர்கள் போராடி வருகின்றனர்.