ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் நிலத்தை அபகரித்து கொலை : 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் 4.5 ஏக்கர் நிலத்தினை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து அவரை கடத்தி கொலை செய்த வழங்கில் குற்றவாளிகள் மகன் உட்பட 4 நபர்களுக்கு இரண்டை ஆயுள் தண்டனை
திருவண்ணாமலை மாவட்டம்,போளுர் அடுத்த கட்டிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைஆசிரியர் ராஜகோபால் இவருக்கு சொந்தமாக 4.5 ஏக்கர் விவசாய நிலத்ததினை அதே பகுதியை சேர்ந்த காசி என்பவருக்கு குத்தகை கொடுத்துள்ளார்.
காசியும் நிலத்தில் பயிர் செய்து வந்துள்ளார். இதனையடுத்து காசி ராஜகோபாலுக்கு சொந்தமான 4.5 ஏக்கர் விவசாய நிலத்தற்கு போலியான ஆவணங்கள் தயாரித்து தனது பெயருக்கு போலியாக பத்திரபதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.இது குறித்து ராஜகோபால் போளுர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு போளூர் நீதிமன்றததில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ராஜகோபாலை மற்றும் குத்தகை வைத்து இருந்த காசி அவரது மகன் பாலமுருகன்,ரெண்டேரிபட்டு பகுதியைசோந்த ஏழுமலை என்ற கூலி தொழிலாளி மற்றும் மாட்டுப்பட்டி கிராமத்தினை சோந்த சீனு என்கின்ற சீனுவாசன் ஆகியோரை நீதிமன்றத்தில் இந்த மோசடி வழக்கு தொடர்பாக ஆஜராக கூறியிருந்தது. அதற்காக போளூர் நீதி மன்றத்திற்கு வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜகோபாலை குத்தகை வைத்திருந்த காசி அவரது மகன் பாலமுருகன்,ஏழுமலை ,சீனு ஆகியோர் காரில் கடத்தி அவரை கொலை செய்துள்ளனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு ராஜகோபால் காணாமல் போனதையடுத்து அவரது குடும்பத்தினர் போளுர் காவல்நிலையில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை செய்து வந்தனர். ஆனால் வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு காணாமல் போன ராஜகோபாலின் குடும்பத்தினர் சிபிசிஐடிக்கு மாற்ற நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அப்போது நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது. அப்போது சிபிசிஐடி காசி மற்றும் அவரது மகன் பாலமுருகன்,ஏழுமலை,சீனு என்கின்ற சீனுவாசன் ஆகியோரிடம் தீவிர விசாரனை செய்தனர். இந்த விசாரணையில் ராஜகோபாலை நீதிமன்றத்திற்கு வராமல் இருக்க கடத்தி அவரை கொலை செய்து செஞ்சி அடுத்த மயிலம் பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் புதைத்து தெரியவந்தது. அதன் பிறகு இவர்கள் 4 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவ வழக்கு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமகள் அவர்கள் இந்த கொலையில் சம்மந்தப்பட்ட காசி மற்றும் அவரது மகன் பாலமுருகன்,ஏழுமலை,சீனு என்கின்ற சீனுவாசன் ஆகிய நால்வருக்கும் இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியும், பாலமுருகனுக்கு 16 ஆயிரம் ரூபாய் அபராதமும் மீதமுள்ள 3 நபர்களுக்கு 16.500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.