Uttar Pradesh: மேக்கப் சாதனங்களை பயன்படுத்திய மாமியார்..விவாகரத்து கேட்ட மருமகள்
திருமணம் என்ற உறவு பற்றி பொதுவாகவே அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். மிகுந்த நம்பிக்கையோடு அந்த வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு ஆசைகள் இருக்கும்.
உத்தரப்பிரதேசத்தில் மாமியார் மேக்கப் பொருட்களை பயன்படுத்தியதால் மருமகள் விவாகரத்து கேட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் என்ற உறவு பற்றி பொதுவாகவே அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். மிகுந்த நம்பிக்கையோடு அந்த வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு ஆசைகள் இருக்கும். ஆனால் சண்டை, சச்சரவு இல்லாத உறவு இல்லை என்பதை புரிந்துகொள்ளாத வகையில் பல உறவுகள் விவாகரத்து கேட்கும் நிலையும் இதே சமூகத்தில் தான் நடைபெறுகிறது. ஆனால் சில சமயங்களில் விவாகரத்து கேட்க சொல்லப்படும் காரணங்கள் எல்லாம் மக்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
அங்குள்ள ஆக்ரா நகரில் உள்ள மால்புரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தான் இந்த விவாகரத்து வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த பெண்ணும், அவரது சகோதரியும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சகோதரர்கள் இருவரை திருமணம் செய்துள்ளனர். இவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் சில வீடுகளில் நடக்கும் மாமியார் - மருமகள் பிரச்சினை வெடித்துள்ளது.
எதற்கு என பார்த்தால், மருமகள் அனுமதியின்றி அவரது மேக்கப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அறிந்த அப்பெண் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார். ஏதேனும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல வேண்டுமென்றால் கூட மருமகளிடம் மேக்கப் பொருட்கள் இருக்காது. அவருடைய மாமியாரே அனைத்தையும் பயன்படுத்தி வந்திருக்கிறார். என்னதான் வாக்குவாதம் செய்தாலும் மாமியார்- மருமகள் பிரச்சினை முடிவுக்கு வந்தபாடில்லை.
ஆனாலும் இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை. நடந்த விசயங்களை தன்னுடைய மகனிடம் மாமியார் தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து, வீட்டில் இருந்து அந்த மாமியார் தன் மகன்களிடம் விஷயத்தை சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் மனைவியை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சகோதரிகளில் ஒருவர் புகார் அளிக்க போலீசிடம் சென்றுள்ளார். மேலும் 2 மாதங்களாக சகோதரிகள் இருவரும் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே ஆக்ரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட குடும்ப ஆலோசனை மையத்தில் நடந்த விஷயங்களை எல்லாம் மருமகல் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருமள்கள் மற்றும் மாமியாரை அழைத்து ஆலோசனையும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மேக்கப் சாதனங்களை கொடுத்த மருமகள் விவாகரத்து வேண்டுமென பிடிவாதமாக இருந்துள்ளார். மாமியார் பிரச்சினை, குடும்ப பிரச்சினை என பல விஷயங்களை முன்வைத்துள்ளார். அடுத்தக்கட்ட ஆலோசனையில் பெண் மற்றும் கணவர் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.