மேலும் அறிய

சடலமாய் கிடந்த மனைவி, 3 மகள்கள்.. மனநலம் பாதிக்கப்பட்ட கணவனால் கொலையா? நடந்தது இதுதான்..

சத்தீஸ்கரில் மனைவி மற்றும் 3 மகள்களை கொலை செய்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது ஜாங்ஜ்கிர் – சம்பா மாவட்டம். இந்த மாவட்டத்தில் பண்டோரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தேவ்ரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2 நாட்களாக ஆட்கள் நடமாட்டம் ஏதும் இல்லாமலும்,  துர்நாற்றமாகவும் இருந்து வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அந்த கிராம மக்கள் ஊர்த்தலைவரிடம் கூறியுள்ளனர். அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்றனர். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது போலீசாரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கே ஒரு பெண் சடலமும், 3 குழந்தைகளின் சடலமும் இருந்துள்ளது.

போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தவர்கள் மோங்ரா பாய் ( வயது 40) அவரது மகள்கள் பூஜா என்ற கல்யாணி ( 16), பாக்கியலட்சுமி ( 10) மற்றும் யாச்னா ( 6) ஆகியோர் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கருவி ஒன்றால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் உயிரிழந்த நான்கு பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவரது கணவர் தேஷ்ராஜ் காஷ்யப்பை கைது செய்துள்ளனர். தேஷ்ராஜ் காஷ்யப்பிற்கு கடந்த 10 ஆண்டுகளாக மன நல பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 31-ஆம் தேதி ( அன்றைய தினம்தான் உயிரிழந்தவர்களை கடைசியாக அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்) தேஷ்ராஜ் காஷ்யப் அண்டை மாவட்டமான பிலாஸ்பூருக்கு சிகிச்சைக்காக மருத்துவரை சந்திக்கச் சென்றுள்ளார். அங்கு மருத்துவரை சந்தித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அதன்பின்பு, அவர்கள் யாரையும் யாரும் பார்க்கவில்லை. இந்த நிலையில், அன்றைய தினம் இரவுதான் தேஷ்ராஜ் காஷ்யப் தன்னுடைய மனைவி மற்றும் 3 மகள்களை மண்வெட்டியால் வெட்டியும், அடித்தும் கொலை செய்துள்ளார் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். இதன் அடிப்படையிலே தேஷ்ராஜ் காஷ்யப்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தேஷ்ராஜ் காஷ்யப்பை போலீசார் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட கணவன் தனது மனைவி மற்றும் 3 மகள்களை அடித்துக் கொலை செய்ததாக சொல்லப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Crime: பார்ட்டியில் நடந்த கொடூரம்.. தோழியின் காதலனால் நிகழ்ந்த வன்மம்.. கோவாவில் பயங்கரம்..

மேலும் படிக்க:  Crime: தரதரவென இழுத்து! 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...கிருமிநாசினியை குடிக்க வைத்த கொடூரம்...நடந்தது என்ன?சத்

தலைப்பு செய்திகள்

மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget