Crime: தரதரவென இழுத்து! 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...கிருமிநாசினியை குடிக்க வைத்த கொடூரம்...நடந்தது என்ன?
உத்தர பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: உத்தர பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே, குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர் கதையாகி இருக்கிறது. இந்நிலையில், தற்போது உத்தர பிரதேசத்தில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உ.பி.யில் கொடூரம்:
உத்தர பிரதே மாநிலம் பரேலி மாவட்டத்தில் மாத் லட்சுமி நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 16 வயது சிறுமி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வழக்கமாக காலை பள்ளிக்கு சென்று, மாலை டியூசன் முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு தான் வீடு திரும்புவார். இதுவே அவர் வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று 16 வயது சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, 16 வயது சிறுமியை நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து பேச்சு கொடுத்துள்ளனர்.
பின்னர், அந்த சிறுமியை அருகில் இருந்து காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனை சிறுமி தடுக்க முற்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள், சிறுமியை வலுக்கட்டாயமாக கிருமிநாசினியை குடிக்க வைத்தனர்.
சிறுமி உயிரிழப்பு:
அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர், அந்த இளைஞர்களை தடுக்க முயன்றார். அவரையும் அவர்கள் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோவாக படம் எடுத்த அந்த கும்பல், அதை சமூக வலைதளங்களிலும் உலாவர விட்டது. பின்னர், அந்த சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அங்கிருந்து தப்பியோடினர். உடனே இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மயக்க நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கிரிநாசினியை குடித்ததால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், குஜராத் மாநிலத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி கல்லூரி மாணவியை மிரட்டி நடன ஆசிரியர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
சென்னை: ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலையா? காதலனிடம் விசாரணை..! நடந்தது என்ன?