மேலும் அறிய
நேர்காணலுக்கு வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் கைது
கணேஷ் பாபு நேர்காணலுக்கு வந்திருந்த அந்த இளம் பெண்ணிடம் ஆபாச வார்த்தைகள் பேசி ஆபாச செயலில் ஈடுபட்டு அவர் ஆடைகளை கலைத்து சில்மிஷ வேலைகள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது

கைது செய்யப்பட்ட கணேஷ் பாபு
சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு. இவர் சென்னை மாதவரம் 200 அடி சாலை குமரன் மருத்துவமனை அருகில் கணேஷ் என்டர்பிரைசஸ் என்கின்ற பெயரில் தனியார் பெயிண்ட் வர்ணம் பூசும் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் செயல்படும் அலுவலகத்திற்கு தனிப்பட்ட செயலாளர் வேலைக்கு பெண்கள் தேவை என விளம்பரம் செய்து இருந்தார். அதன் பேரில் அந்த நிறுவன பணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கலா என்ற பெண் நேர்காணலுக்கு சென்றிருந்தார்.
அந்தப் பெண்ணிடம் நேர்காணல் நடத்திய நிறுவன உரிமையாளர் கணேஷ் பாபு ஆபாச வார்த்தைகள் பேசி அந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த மாதவரம் போலீசார் நிறுவன உரிமையாளர் கணேஷ் பாபுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நிறுவன உரிமையாளர் கணேஷ் பாபு நேர்காணலுக்கு வந்திருந்த அந்த இளம் பெண்ணிடம் ஆபாச வார்த்தைகள் பேசி ஆபாச செயலில் ஈடுபட்டு அவர் ஆடைகளை கலைத்து சில்மிஷ வேலைகள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த சென்னை மாதவரம் போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
துபாயில் மேலாளராக பணிபுரிந்து வந்த நபரின் வீட்டில் கொள்ளை - நீராவி முருகனின் சித்தி சித்தப்பா உள்ளிட்டோர் கைது
சென்னை கொடுங்கையூர் அருள் நகர் பகுதியை சேர்ந்தவர் மேர்வின் தாமஸ். இவர் துபாய் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேர்வின் தாமஸ் வசித்து வந்த வீட்டினை மாதவரத்தில் உள்ள அவரது தந்தை மார்க்ரெட் தாமஸ் பராமரித்து வந்துள்ளார். இதனை அடுத்து மேர்வின் தாமஸ் வீட்டின் அருகே வசித்து வந்த சம்பத் என்பவர் மெர்வின் தாமஸ் வீட்டின் கதவு திறந்து இருப்பதாக தொலைபேசி மூலம் அவருடைய தந்தை மார்க்கெட் தாமஸ் அவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த மார்கரெட் தாமஸ் இதுகுறித்து சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.

வீட்டில் இருந்த 60 சவரன் தங்க நகைகள் கொள்ளை போயுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மூலம் கொள்ளையர்களை தேடி வந்தனர். தனிப்படை போலீசாருக்கு குற்றவாளிகள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கும்பகோணம் விரைந்த தனிப்படை போலீசார், அங்கு வீட்டில் பதுங்கி இருந்த பிரபல கொள்ளையன் நீராவி முருகனின் சித்தப்பா மோகன் என்பவனையும் அவனுடன் பதுங்கியி இருந்த நீராவி முருகனின் சித்தி உஷாராணி என்பவரையும் கைது செய்தனர்.
மற்றும் நீராவி முருகனின் தம்பியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து அவர்களை கைது சென்னை அழைத்து வந்து அவர்களை விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் கொடுங்கையூர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தொழிலதிபர் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















