மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ரூபாய் 5 கோடி மதிப்புள்ள போதை பொருளை கண்டுபிடித்த மோப்ப நாய்..! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!
"மெத்தோ குயிலோன் என்ற போதை பொருள் ஒரு கிலோ 542 கிராம் மற்றும் ஹெராயின் போதை பொருள் 644 கிராம் இருந்தன"
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 5.35 கோடி மதிப்புடைய 2.2 கிலோ போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். உகாண்டா நாட்டு பெண் பயணி, உடமைக்குள் மறைத்து வைத்திருந்த போதைப் பொருளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய், முகர்ந்து பார்த்து கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்தது, சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அஃபாபாவில் இருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் உகாண்டாவில் இருந்து எத்தியோப்பியா வழியாக சென்னை வந்தார்.
சுங்க அதிகாரிகளுக்கு உகாண்டா பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்தப் பெண் பயணி, சுற்றுலா பயணியாக வந்த என்னை வரவேற்காமல், குற்றவாளி போல் நிறுத்தி விசாரிப்பது எப்படி? என்று ஆத்திரப்பட்டார். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர். எங்களுடைய கடமை நாங்கள் நாங்கள் செய்கிறோம் என்று கூறினார். அதன் பின்பு அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்றனர். அவருடைய உடைமைகளையும் வரவழைத்தனர். பின்பு உடமைகளில் போதைப்பொருட்கள், மற்றும் அபாயகரமான பொருட்கள் ஏதாவது இருக்கிறதா? என்பது பற்றி அறிவதற்காக, சுங்க அதிகாரிகள் பயன்பாட்டுக்காக உள்ள, ஸ்னீப்பர் என்ற பெயருடைய பெண் மோப்ப நாய் மூலம் பரிசோதித்தனர்.
போதைப்பொருளை கண்டுபிடித்த மோப்பநாய்:
மோப்ப நாய் அந்தப் பெண் பயணியின் உடமையை மோப்பம் பிடித்தது. பின்பு அதில் போதைப் பொருட்கள் இருக்கிது என்று குரைத்துக் காட்டியது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பெண் பயணியின் உடமையை திறந்து பார்த்து சோதித்தனார். அதனுள் மெத்தோ குயிலோன் என்ற போதை பொருள் ஒரு கிலோ 542 கிராம் மற்றும் ஹெராயின் போதை பொருள் 644 கிராம் இருந்தன. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த போதைப் பொருட்களின் மொத்த சர்வதேச மதிப்பு ரூபாய் 5.35 கோடி. இதை அடுத்து உகாண்டா நாட்டு பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. இவர் சென்னையில் யாருக்காக இந்த போதை பொருளை கடத்தி வந்தார்? சென்னையில் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் யார் யாரெல்லாம் இருக்கின்றனர்? என்று இந்த இளம் பெண்ணிடம் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உகாண்டா நாட்டுப் பெண் பயணி போதைப் பொருள் கடத்தி வந்ததை, சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகளின் துப்பு துலக்கும் பெண் மோப்ப நாய் கண்டுபிடித்து, அதிகாரிகளுக்கு காட்டி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion