மேலும் அறிய
சென்னை : மோட்டார் சைக்கிள் வீராங்கனையை நள்ளிரவில் பின் தொடர்ந்த நபர்.. தட்டித்தூக்கிய சென்னை போலீஸ்..!
தேசிய மோட்டார் பந்தய வீராங்கனையை தொந்தரவு கொடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
சென்னை ஆதம்பாக்கம் அடுத்த நியூ காலனி, பிரதான சாலையில் வசித்து வருபவர் நிவேதா. இவர் பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் கிளப் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். இவர் இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் கடந்த 11ஆம் தேதி, தனது சமூக வலைதள பக்கம் ஆன ட்விட்டரில் சென்னை காவல்துறை பக்கத்தை "டேக்" செய்து புகார் ஒன்றை அளித்திருந்தார். இரவு திருமங்கலத்தில் உள்ள மோட்டார் சைக்கிளில், சென்றுவிட்டு அண்ணா நகரில் இருந்து வேலையை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும் போது, கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த மர்ம நபர் அசோக் பில்லர் பகுதியிலிருந்து பின் தொடர்ந்ததாக தெரிவித்தார். ஒல்லியான உருவம் கொண்ட அந்த , நபர் ஆலந்தூர் வரை பின்தொடர்ந்து வந்ததாகவும், அதன்பின் சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே குடும்பதாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததாகவும் என குறிப்பிட்டிருந்தார். அந்த மர்ம நபர் சென்று விட்டதாக நினைத்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோது , மீண்டும் அந்த மர்ம நபர் பின் தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார். சரியாக இரவு ஒரு மணி அளவில் கருணீகர் தெரு, லக்கி கல்யாண மண்டபம் பகுதி கடந்து செல்லும், போது அந்த மர்ம நபர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் செல்போனை பறிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டரில் சென்னை காவல் துறையினர் ரிப்ளை செய்திருந்தனர்.
அதன் பேரில் தீவிர தேடுதலில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று புளியந்தோப்பை பகுதியை சேர்ந்த சந்திரகாசன் என்பவரை எண்ணூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவருடன் காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் அவர், பாரிமுனை பகுதியில் உள்ள ஒரு இரும்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார், மேலும் இரவு நேரங்களில் பார்ட் டைமில் ஓலா பைக் ஓட்டி வருவதும் தெரியவந்தது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, பைக்கில் வாடிக்கையாளர் ஒருவரை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில், இறக்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு செல்லும்போது அசோக்நகர் அருகே நிவேதா ஜெஸிகாவை பார்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்தவித நேரடி சாட்சியங்கள் மற்றும் முக்கிய துப்பு இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட நபரை காவல்துறை கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion