Crime : யூ ட்யூப்பில் நெருக்கமான படங்கள்.. கதறும் இளம்பெண்ணின் புகார்.. கானா பாடகரை தட்டித்தூக்கிய போலீஸ்..!
திருமணம் செய்துகொள்ளலாம் என உறுதியான வார்த்தைகளைக் கூறி அப்பெண்ணுடன் 2 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளார் கானா பாடகர் சபேஷ்.
திருமணமாகி பிரிந்து தனியாக வாழ்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக்கூறி பாலியல் வன்கொடுமை செய்த கானா பாடகரை போலீசார் கைது செய்தனர்
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் சபேஷ் சாலமன். 35 வயதான சபேஷ் கானா பாடகராக உள்ளார். பாடல்களைப்பாடி யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வருகிறார் சபேஷ். இவருக்கும் சென்னை பெரவள்ளுரைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்த நிலையில் 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கானா பாடகருடன் காதல் ஏற்பட்டுள்ளது அந்த பெண்ணுக்கு.
திருமணம் செய்துகொள்ளலாம் என உறுதியான வார்த்தைகளைக் கூறி அப்பெண்ணுடன் 2 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளார் கானா பாடகர் சபேஷ். மறுமணமும் செய்துகொள்ளாமல் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாலியல் தொந்தரவு அளித்த நிலையில் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து மிரட்டல்களையும் விடுத்துள்ளார்.
பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் யூடியூப்பில் பதிவேற்றம் செய்வேன் என்றும், குழந்தைகளை கொல்வேன் என்றும் பாடகர் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வில்லிவாக்கம் அனைத்து காவல் நிலையத்தில் அப்பெண் புகாரளித்துள்ளார். அந்த புகாரில்,'' தன்னை திருமணம்செய்துகொள்வதாகக் கூறி கானா பாடகர் சபேஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்வேன் என மிரட்டுவதாகவும், சபேஷுக்கு துணையாக அவரது தந்தையும் சேர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, கானா பாடல் மூலமாகவே அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்தப்பாடலில் பப்ளிக்காக என்னுடைய யூடியூப்பில் போடுவேன். யாருக்கிட வேனும்னாலும் சொல்லிக்க. யாரு வந்தாலும் பாத்துப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், குற்றச்சாட்டு தொடர்பாக சபேஷ் மற்றும் அவரது தந்தையிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், இளம்பெண்ணுக்கு கானா பாடகர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததும், கொலை மிரட்டல்விடுத்ததும் உறுதியானது. இதனை அடுத்து கானா பாடகரை வில்லிவாக்கம் காவல்துறை கைது செய்தது. பெண்ணின் மானத்துக்கு குந்தகம் விளைவித்தல், மிரட்டல், தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கானா பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்