மேலும் அறிய
Crime : பெரும்பாக்கத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழப்பு..! உறவினர் சாலை மறியல்..!
40 வயது மதிக்கத்தக்க நபர் மின்சரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
![Crime : பெரும்பாக்கத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழப்பு..! உறவினர் சாலை மறியல்..! chennai perumbakkam person riding a two-wheeler was killed when an electric pole fell on him Crime : பெரும்பாக்கத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழப்பு..! உறவினர் சாலை மறியல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/20/8b7c3169b4500523fbf66af8319ecbee1676877711330109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழப்பு
மின் வயர் அறுந்து விழுந்து 40 வயது மதிக்கத்தக்க நபர் மின்சரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலத்துடன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் செய்துவருகின்றனர்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம், நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் 40-வயது மதிக்கத்தக்க முகமது இஸ்மாயில் அவரது குழந்தைகளை அரசங்கலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சாலையில் மின் வயர் அறுந்து முகமது இஸ்மாயில் மீது விழுந்துள்ளது.
![Crime : பெரும்பாக்கத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழப்பு..! உறவினர் சாலை மறியல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/20/c330c9ee61dae277c2e8fe23876899a51676877626027109_original.jpg)
மின் உயர் விழுந்து மின்சாரம் பாய்ந்துள்ளது
இதில் அவரது உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சாலையில் சென்ற நாய் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. அதே சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்னே வந்த ஒரு டாட்டா ஏசி வாகனத்திலும் மின் உயர் விழுந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக டாட்டா ஏசி ஓட்டுநர் உயிர்தப்பினார்.
![Crime : பெரும்பாக்கத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழப்பு..! உறவினர் சாலை மறியல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/20/773cfd13a3986086ca44a90035f460011676877686658109_original.jpg)
தொடரும் சமாதான பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல் மாவட்ட துணை ஆணையர் ஜோஸ் தங்கையா தலைமையிள் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில், குவிந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் உறவினர்கள் உடலை கைப்பற்றப்படவிடாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் , உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion