மேலும் அறிய

சென்னை: ரூ.25 லட்சம் கடன்.. திருப்பிக் கேட்ட முதியவரை வெளிநாட்டில் அடகு வைத்த இளைஞர்! பகீர் சம்பவம்!

வாங்கிய கடனை திருப்பித்தருவதாக கூறி முதியவரை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று ரூ.7 லட்சத்துக்கு வாலிபர் அடமானம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் 40 வயதான லட்சுமி . இவர், சென்னை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 70 வயதான எனது தந்தை சக்திவேல், தாயாருடன் வசித்து வருகிறார். எனது தந்தையின் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையை சேர்ந்த வாலிபர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

அவர் எனது தந்தையிடம் குடும்ப கஷ்டங்களை கூறி ரூ.25 லட்சம் கடனாக பெற்றுள்ளார். பின்னர் அந்த தொகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அந்த வாலிபர் கடந்த 10 ஆம் தேதி எனது தந்தையிடம், தனக்கு வெளிநாட்டில் வசிக்கும் சிலர் பணம் தர வேண்டி உள்ளது. நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி தருகிறேன். பின்னர் இருவரும் வெளிநாட்டை சுற்றி பார்த்து விட்டு வரலாம் என கூறி உள்ளார்.

மேலும் படிக்க : World Athletics Championships 2022: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார் நீரஜ்! 19 ஆண்டுகள் பின் இந்தியாவுக்கு பதக்கம்

இதனை நம்பிய எனது தந்தை சக்திவேல் உக்ரைன் அருகே உள்ள ஒரு நாட்டிற்கு அந்த வாலிபருடன் சென்றுள்ளார். அங்கு அந்த வாலிபர் எனது தந்தையை அந்த நாட்டை சேர்ந்தவரிடம் ரூ.7 லட்சத்துக்கு அடமானமாக வைத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு வந்து விட்டார். இதுபற்றி எனது தந்தை வாட்ஸ்அப் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். எனவே எனது தந்தையை மீட்டு தருவதோடு அவரை ஏமாற்றி வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் பேராவூரணியில் நடைபெற்றதால் பேராவூரணியில் புகார் அளிக்குமாறு சென்னை அண்ணாநகர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சக்திவேலின் மனைவி அலமேலு, அதே புகாரை பேராவூரணி போலீசில் அளித்தார். அதன் பேரில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!

களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?

Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு

ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி

Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!

Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?

அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்

Embed widget