மேலும் அறிய
Advertisement
சென்னை: பாதாளச் சாக்கடையில் விழுந்து விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
மழையால் ஏற்பட்ட விபரீதம் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கூலித் தொழிலாளி பலி.
சென்னை பல்லாவரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதாளச் சாக்கடை விரிவுபடுத்தும் பணியின் ஒரு பகுதியாக இந்த பணி கடந்த சில மாதங்களாக வேகமாக நடைபெற்று வருகிறது. பல்லாவரம் ரேடியல் சாலையில் பாதாள சாக்கடை பணியானது நடைபெற்று வருகிறது. இதற்காக 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, காங்கீரிட் போடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சுமார் 20 அடி தோண்டப்பட்ட பள்ளத்தில் கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கான்க்ரீட் போடப்பட்டு இருப்பினும் காங்கிரீட்டின் பக்கவாட்டில் பள்ளத்தை முழுமையாக மூடப்படாமல் இருந்துள்ளது. இரு தினங்களாக மழை பெய்து ஈரப்பதமாக இருந்ததால் இன்று காலை பணிக்கு வந்த கல்கத்தாவை சேர்ந்த கூலித் தொழிலாளியான திரேஸ் சர்க்கார் (50), என்பவர் மேலே கால் வைத்த போது மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற சிட்லபாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தாலும் கான்கிரீட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.பல்லாவரம் ரேடியல் சாலையில் பாதாள சாக்கடை பணியானது நடைபெற்று வருகிறது. இதற்காக 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, காங்கீரிட் போடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சுமார் 20 அடி தோண்டப்பட்ட பள்ளத்தில் கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கான்க்ரீட் போடப்பட்டு இருப்பினும் காங்கிரீட்டின் பக்கவாட்டில் பள்ளத்தை முழுமையாக மூடப்படாமல் இருந்துள்ளது.
இரு தினங்களாக மழை பெய்து ஈரப்பதமாக இருந்ததால் இன்று காலை பணிக்கு வந்த கல்கத்தாவை சேர்ந்த கூலித் தொழிலாளியான திரேஸ் சர்க்கார் (50), என்பவர் மேலே கால் வைத்த போது மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் அலட்சியத்தின் காரணமாக இந்த விபத்து நடைபெற்றதா அல்லது எதிர்பாராத விதத்தில் இந்த விபத்து நடைபெற்றதால் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion