மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Crime : தூங்கவிடாமல் தொல்லை செய்ததால், நண்பனை கொன்றுவிட்டு அருகிலேயே படுத்துத் தூங்கிய பயங்கரம்..
பல்லாவரத்தில் மதுபோதையில் தனது நண்பரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த நபரால் பரபரப்பு
சென்னை பல்லாவரம் காவல் நிலையத்திற்க்கு இன்று காலை மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராஜா(44) என்பவர் பிளாட்பாரத்தில் தங்கி தனது நண்பர் பல்லாவரத்தை சேர்ந்த சின்னதுரை (29) என்பவருடன் சேர்ந்து பெயிண்டிங் வேலை செய்து வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு பல்லாவரம் சாலையில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையின் முன்பு பேசி கொண்டிருந்தபோது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த ராஜா தனது நண்பர் சின்னதுரை தூங்கும் வரை காத்திருந்து அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துவிட்டு சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் சின்னதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ராஜாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, இருவரும் நீண்ட வருடங்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் சேர்ந்து அமர்ந்து மது குடித்தனர். திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது, வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரம் அடைந்த ராஜா, நண்பர் சின்னதுரையை தீர்த்துக்கட்ட முடிவு எடுத்தார். எனவே சின்னதுரை தூங்கும் வரை காத்திருந்தார் ராஜா.
அதன்படி நள்ளிரவில் சின்னதுரை தூங்கியதும், ராஜா அருகில் கிடந்த பெரிய கல்லை தூக்கி சின்னதுரையின் தலையில் போட்டார். இதில் சின்னதுரை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், சின்னதுரை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Chess olympiad 2022: இந்தியாவுக்கு முக்கியமான நாள்.. தொடர் வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுமா இந்தியா?
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion