Instagram-ல் மெசேஜ் , கமெண்ட்: சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
சமூக வலைதள மூலம் பெண்ணிற்கு , அவதூறு மெஸேஜ் , கமெண்ட் அனுப்பிய நபர் கைது.

Instagram - ல் அவதூறு மெசேஜ் ;
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வரும் 21 வயது பெண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு , Rtr Mani Ketavanmani என்ற இன்ஸ்டாகிராம் ID - யிலிருந்து தவறான மெஸேஜ் வந்தது என்றும், தான் அதனை பிளாக் செய்து விட்டதாகவும் , மீண்டும் அதே ID - யிலிருந்து வீடியோவின் கமெண்ட் செக்க்ஷனில் அவதூறாகவும் , அருவருக்கதக்க வகையிலும் மெஸேஜ் வந்ததாகவும் எனவே அந்த நபரினை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரினை பெற்று , வடக்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
IP address மூலம் சிக்கிய நபர் ;
இப்புகார் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திட வடக்கு மண்டல இணை ஆணையாளர் மனோகர் அறிவுரையின் பேரில் , வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணையில் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் Rtr Mani Ketavanmani என்ற ஐடியை பதிவிட்ட நபரை பற்றிய தகவல் வேண்டி Meta Platform - க்கு மெயில் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் IP Address ன் Mail ID, Phone Number, அதன் Network User ID முகவரி ஆகியவற்றை பெறப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பற்றிய விவரம் தெரிய வந்தது.
சிறையில் அடைப்பு
அதன் அடிப்படையில் , கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 29) என்பவரை சென்னையில் வைத்து கைது செய்து , இவ்வழக்கின் குற்றத்திற்காக பயன்படுத்திய Redmi 9 Prime Mobile Phone என்ற மொபைல் போன் கைப்பற்றப்பட்டது. மேற்படி கைது செய்யப்பட்ட திவாகர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் தலை மறைவு எதிரிகள் இருவர் கைது. 2 செல்போன்கள் பறிமுதல்
போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) காவல் குழுவினர் , சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும் , வலை பின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக , போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) காவல் குழுவினர் மற்றும் K-8 அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அரும்பாக்கம் வல்லவன் ஓட்டல் அருகே கண்காணித்து சட்ட விரோதமாக மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த அந்தோணி ரூபன், ( வயது 29 ) , தீபக்ராஜ் ( வயது 25 ) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். அவர்களிடமிருந்து 14.2 கிராம் மெத்தபெட்டமைன், பணம் ரூ.12,000/-, 2 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.





















