மேலும் அறிய

எம். எல்.ஏ., சீட்டு வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சர் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் அளித்த புகாரில், மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்துள்ள ஜெயலட்சுமி நகரை சார்ந்தவர் புவனேஷ் குமார் (வயது 29). இவர் ஆரணியில் பாஜக நகர தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 30 ஆம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இந்த புகாரில், எனது சித்தப்பா மகளான திருவண்ணாமலை பாஜக மகளிரணி மாவட்ட துணைத் தலைவர் வசந்திக்கு எம்.எல்.ஏ சீட்டு கேட்டு, அப்போதைய தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளர் நரோத்தமன் மற்றும் அதிமுக வடசென்னை மாவட்ட துணை செயலாளர் விக்ரமன் ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

எம். எல்.ஏ., சீட்டு வாங்கித் தருவதாக  ரூ.50 லட்சம் மோசடி:  மத்திய அமைச்சர் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

இருவரும் சேர்ந்து ரூ.1 கோடி பணம் கேட்ட நிலையில், ரூ.50 இலட்சம் முதல் தவணையாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கொடுக்கப்பட்டது. பட்டியலில் பெயர் வந்ததும் மீதமுள்ள ரூ.50 இலட்சம் வழங்கப்படும் என பேசி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் பட்டியலில் எனது உறவினர் வசந்தியின் பெயர் இல்லாத காரணத்தால், அவர்களிடம் கேட்கப்பட்டது.

இதற்கு முதலில் மழுப்பலாக பதிலளித்த இருவரும், பணத்தை திரும்ப கேட்டதற்கு பணம் தராமல் கொலை மிரட்டல் விடுத்து இருக்கின்றனர். இது தொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழிசை சவுந்தர்ராஜன் உட்பட பலரிடம் முறையிட்டும் எந்த ஒரு பலனில்லை. மேலும், சென்னை வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் முறையிட்டும் எந்த விதமான பலனளிக்கைவில்லை . இதனால் உங்களிடம் புகார் அளித்துள்ளேன் என்றுள்ளார். 

எம். எல்.ஏ., சீட்டு வாங்கித் தருவதாக  ரூ.50 லட்சம் மோசடி:  மத்திய அமைச்சர் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

சம்பந்தப்பட்ட நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.இந்த புகாரில் விசாரணைக்கான முகாந்திரம் உள்ளதா என்பதற்கான  குறித்து இது தொடர்பாக ஆராய்ந்து வரும் காவல் துறையினர், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முகாந்திரம் சட்ட ரீதியாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த புகாரின் தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று தற்போது பாண்டி பஜார் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக மத்திய அமைச்சர் உதவியாளராக இருந்த நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டிபாபு, அதிமுக பிரமுகர் விஜயராமன் மற்றும் அவரது மகன் சிவபாலாஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 294(பி) - ஆபாசமாக திட்டுதல், 406 - நம்பிக்கை மோசடி, 420 - பண மோசடி, 506(1) - கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் போலீசார் மத்திய அமைச்சரின் உதவியாளர் நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு, வடசென்னை மாவட்ட அதிமுக நிர்வாகி விஜயராமன், அவரது மகன் சிவபாலாஜி ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 4 நபர்களையும் தேடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
Embed widget