மேலும் அறிய

Crime : கள்ளக்காதலியின் 2 மகன்களை கொல்ல முயற்சித்த கள்ளக்காதலன்..! விஷம் குடித்து தற்கொலை..!

சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலியின் மகன்களை விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற கள்ளக்காதலன், தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை, கொருக்குப்பேட்டையில் அமைந்துள்ளது பாரதிநகர். இங்குள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கவிதா. அவருக்கு வயது 32.  இந்த நிலையில், அவரது வீட்டில் நேற்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது, அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கவிதாவின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கே, கவிதாவின் இரண்டு மகன்களும், ஒரு 35 வயது ஆணும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கவிதாவிற்கும், போலீசாருக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் 3 மயக்க நிலையில் இருந்த மூன்று பேரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Crime : கள்ளக்காதலியின் 2 மகன்களை கொல்ல முயற்சித்த கள்ளக்காதலன்..! விஷம் குடித்து தற்கொலை..!

இதையடுத்து, போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. கவிதாவிற்கும் அவரது கணவர் ரசூலுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். இந்த சூழலில், கவிதா வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த ராஜேஷ் ( வயது 35) என்பவருடன் கவிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷ் வட பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்.  இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் பழகி வந்துள்ளனர். மேலும், ராஜேஷ் கவிதா வீட்டிற்கு அடிக்கடிச் சென்று இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கவிதாவின் இரண்டு மகன்களும் வளர்ந்து வந்ததால், ராஜேஷ் வீட்டிற்கு வருவதை கவிதா விரும்பவில்லை. இதனால், ராஜேஷிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். ஆனால், ராஜேஷ் கவிதாவை தன்னுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால், கவிதா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

Crime : கள்ளக்காதலியின் 2 மகன்களை கொல்ல முயற்சித்த கள்ளக்காதலன்..! விஷம் குடித்து தற்கொலை..!

இந்த நிலையில், தன்னுடைய கள்ளக்காதலுக்கு கவிதாவின் இரண்டு மகன்கள்தான் காரணம் என்று ராஜேஷ் கருதினார். இதனால், அவர்களை ராஜேஷ் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இந்த சூழலில்தான், கவிதா வீட்டிற்கு சென்ற ராஜேஷ், தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த விஷத்தை குளிர்பானத்தில் கலந்து சிறுவர்களுக்கு கொடுத்துள்ளார்.

குளிர்பானத்தில் விஷம் இருப்பதை அறியாத சிறுவர்கள் இருவரும் குளிர்பானத்தை குடித்தனர். அவர்கள் குடித்த பிறகு, ராஜேஷும் விஷத்தை குடித்தார். விஷம் குடித்த சில நிமிடங்களிலே மூன்று பேரும் மயக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவர்கள் இருவருக்கும் தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து கள்ளக்காதலன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : Crime: 40 வயதை பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை - தூத்துக்குடியில் ரவுடி கைது

மேலும் படிக்க : Crime : செஞ்சி அருகே திருமணமான 6 நாளில் புதுமணப்பெண் தற்கொலை.. மனமுடைந்த கணவரும் தற்கொலை

தலைப்பு செய்திகள்

"நகைக் கொள்ளை வழக்கில் சிக்கிய பெண் காவலர்" பணியிடை நீக்கத்தால் விபரீதம் -இறுதியில் நடந்த சோகம்
"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget