மேலும் அறிய
Advertisement
தோழியிடம் பேசிக் கொண்டிருந்த நபர்..! கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்..! ஆப் மூலம் 40,000 பறிப்பு..!
இதுகுறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை, கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சென்னை தலைநகரை சுற்றி உள்ள , சென்னை புறநகர் பகுதிகளில் அதிகளவு வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் புறநகர் பகுதிகளாக இருக்கும், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளிப்பதும், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து பொருட்களை மீட்டு தண்டனை வாங்கிக் கொடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக செல்லும், நபர்கள் மற்றும் காதல் ஜோடிகளை குறிவைத்து இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் மாலை வேளையில், துவங்கி அதிகாலை வரை தொடர்ந்து இரவு ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் காவல்துறையினர் பார்வையில் சிக்காமல் அடிக்கடி இது போன்ற சம்பவத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை நீலாங்கரை, கடற்கரையில் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞரை மிரட்டி, அவரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் நூதன முறையில் செயலி மூலம் பணம் பறித்துக்கொண்ட சென்ற மர்ம கும்ப கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை , ஜெயராம் தெருவைச் சோந்தவா் முகம்மது ஹூசைன். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தோழியுடன் சென்னை நீலாங்கரை , அடுத்துள்ள கபாலீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள கடற்கரையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கடற்கரை ரசித்தபடி தோழியுடன் தோழியுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
இரவு நேரம் என்பதால், அதிகளவு மக்கள் கடற்கரையில் இல்லாமல் இருந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மரம் மர்ம கும்பல், கடற்கரையில் பேசிக் கொண்டிருந்த, இருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளனா். ஹூசைன் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளாா். இருந்தும் அந்த மர்ம கும்பல் விடாமல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஹூசைனை தாக்கி, அவா் வைத்திருந்த பணப்பையை பறித்து, அதில் இருந்த ரூ.600 திருடியுள்ளனர். அவரது கைப்பேசியை பறித்து, அதில் பணம் அனுப்பும் செயலி மூலம், தங்களது வங்கிக் கணக்குக்கு, ரூ.40 ஆயிரத்தை அனுப்பி வழிப்பறி செய்தனா். இது குறித்த காவல் நிலையத்தில் ஹூசைன் அளித்த புகாரின் பதில், வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர் . சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion