‘பணம் அனுப்பிட்டேன் பாருங்க..’ Success மெசேஜை காட்டி ஏமாற்றி சென்ற டிப் டாப் இளைஞர்
டிப் டாப் உடையில் பணம் அனுப்பி விட்டதாக செல்போனை ஏமாற்றி வாங்கி சென்ற இளைஞர்.

புதிய மாடல் செல்போன்
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே குமரன் என்ற பெயரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் செல்போன் கடைக்கு வாலிபர் ஒருவர் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையில் வேலை செய்யும் பெண்களிடம் புதிய மாடல் செல்போன் ஒன்று கேட்டுள்ளார். பணிபுரியும் ஊழியர்கள் ரூ.16, 000 மதிப்புள்ள VIVO மொபைல் கொடுத்துள்ளனர். அந்த இளைஞர் 15,500 ரூபாய் பேரம் பேசி செல்போன் வாங்கியுள்ளார்.
Success மெசேஜ் காண்பித்த இளைஞர்
இளைஞர் ஸ்கேன் செய்து பணம் அனுப்பியதாக கூறியுள்ளார். கடையில் பணி புரியும் பெண்கள் பணம் வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞர் மீண்டும் ஸ்கேன் செய்து பணம் அனுப்பியதாக சக்ஸஸ் மெசேஜ் காண்பித்துள்ளார். கடைக்குள் உள்ளே சென்று செல்போனில் மெசேஜ் வராததை பார்த்த பெண்கள் கடையில் நின்று கொண்டு இருந்த இளைஞர் செல்போனை எடுத்து கொண்டு தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் பாலமுருகன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரனையில் , இதே போல் புழல் பகுதியில் செல்போன் கடைக்கு சென்று ஸ்கேன் செய்து பணம் அனுப்பியதாக கூறி ஏமாற்றி விலை உயர்ந்த செல்போன் எடுத்து சென்றது தெரிய வந்தது. மோசடி வாலிபர் பயன்படுத்திய இருசக்கர வாகன நம்பர் வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
என் தம்பி மீதே கம்ப்ளையன்ட் கொடுக்குறியா ? சிறுமியை கத்தியால் வெட்டிய நபர்
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவரின் 17 வயதான மகளை அப்பகுதியை சேர்ந்த மதன் குமார் என்பவர் தொடர்ந்து உடல் ரீதியான பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த மாதம் 16 ம் தேதி அன்று தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார , மதன் குமாரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 24 ம் தேதி அன்று இரவு , சிறுமி தன் வீட்டில் அருகே இருக்கும் காய்கறி கடைக்கு சென்ற போது பொது மக்கள் முன்னிலையில் சிறையில் இருக்கும் மதன் குமாரின் மனைவி மாரியம்மாள் என்பவரின் தூண்டுதலின் பேரில் மதன் குமாரின் அண்ணன் பாபு என்பவன் பாதிக்கப்பட்ட சிறுமியின் தலை முடியை பிடித்து இழுத்து , என் தம்பி மீதே கம்ப்ளைன்ட் கொடுக்கிறியா ? இப்போ போய் கம்ப்ளைன்ட் கொடு என்று கூறி சரமாரியாக தாக்கி விட்டு , தான் வைத்திருந்த கத்தியை கொண்டு சிறுமியின் முகம் , கை மற்றும் முதுகு பகுதியில் பலமாக வெட்டி விட்டு , சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தன் கூட்டாளிகள் இருவருடன் தப்பித்து சென்று விட்டான்.
காவல் துணை ஆணையர் நேரில் ஆய்வு
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சிறுமியை பொது மக்கள் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் பாஸ்கரன் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் சந்தித்து பார்வையிட்டு விசாரணை செய்தார். ஆர்.கே. நகர் காவல் நிலைய போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் , அவரது தாயாரிடமும் வாக்கு மூலம் பெற்று , சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி விட்டு தப்பியோடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















